திருச்சி மாவட்டத்தில் நாளை (21.11.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டத்தில் நாளை (21.11.2023) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

திருச்சி மாவட்டம் துறையூரில் மூன்று துணை மின் நிலைய பகுதிகளில் நாளை (21.11.2023) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது இதனால் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டி பாளையம், பா.மேட்டூர், காஞ்சேரிமலைபுதூர், சோபனபுரம், துரெங்கநாதபுரம், பச்சைமலை,

கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம், மருவத்தூர், செல்லிபாளையம், செங்காட்டுப்பட்டி, வேங்கடத்தானூர், பெருமாள்பாளையம், த.முருங்கப்பட்டி, த.மங்கப்பட்டி மற்றும் த.பாதர்பேட்டை ஆகிய பகுதிகளில் நாளை (21.11.2023) காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணிவரை மின்விநியோகம் இருக்காது.

மேலும்,மின்வரியத்தின் உயர் மற்றும் தாழ்அழுத்த மின் பாதைகளுக்கு அருகில் போதிய இடைவெளி விட்டு கட்டிடங்கள் கட்ட வேண்டும், வரவிருக்கும் பருவமழை காலங்களில் மின்கம்பம் மின் இழுவை கம்பிகளில் கால்நடைகளை கட்டாமல் இருக்கவேண்டும், மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை உரிய பிரிவின் அனுமதி பெற்று வாரிய பணியாளர்களின் முன்னிலையில் அகற்ற வேண்டும், வயல்வெளிகளில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றம் எனவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக துறையூர் கோட்டம் செயற்பொறியாளர் பொன். ஆனந்தகுமார் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision