திருச்சி துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் 25-ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிப்பு
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மேற்கு வட்டம், வில்லியம்ஸ் ரோடு, ஆர்கேட் மூன்றாவது தளம் என்ற முகவரியில் இயங்கும் M/s. Sri ACL Infosys, என்ற நிறுவனம் சொத்தினை அடமானம் வைத்து கனராவங்கியில் பெற்ற கடன் தொகையினை திரும்ப செலுத்தாத காரணத்தினால் SARFASI- சட்டத்தின்படி, நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் ஜப்தி செய்ய சென்ற திருச்சிராப்பள்ளி (மேற்கு) மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார்.
(18.10.2023)-அன்று கொலைவெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் ஒட்டுமொத்த கூட்டமைப்பின் சார்பில் (19.10.2023) மற்றும் (20.10.2023) ஆகிய இரு தினங்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேற்படி சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் திருப்தி அளிக்காத காரணத்தினால் வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் ஒட்டுமொத்த கூட்டமைப்பின் சார்பில் பின்வரும் முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
1. மேற்படி சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கார்த்திக் என்பவருக்கு மாண்பமை. சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து வருவாய்த்துறை அலுவலர் சங்கங்களின் ஒட்டுமொத்த கூட்டமைப்பின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.
2. (21.10.2023) முதல் (24.10.2023) வரை உள்ள விடுமுறை நாட்களில் வருவாய்த்துறையில் உள்ள அனைத்து நிலை அலுவலர்களும் (கிராம உதவியாளர் முதல் வருவாய் வட்டாட்சியர் வரை) எவ்வித பணியினையும் (சட்டம் மற்றும் ஒழுங்கு, சான்றிதழ், K உரிமம் மற்றும் முக்கிய பிரமுகர்கள்/அலுவலர்கள் வருகை வரவேற்பு பணி உள்ளிட்ட அனைத்து பணிகளையும்) செய்வதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
3. சம்பவத்தை கண்டித்து எதிர்வரும் (25.10.2023)-அன்று முதல் மாநிலம் தழுவிய வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கங்களின் ஒட்டுமொத்த கூட்டமைப்பு சார்பில் எழுச்சிமிகு பணிப்புறக்கணிப்பு போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision