அவதூறாக போஸ்டர் - பரபரப்பாகிய கிராமம் - போலீஸ் குவிப்பு

அவதூறாக போஸ்டர் - பரபரப்பாகிய கிராமம் - போலீஸ் குவிப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே சீலைப்பிள்ளையார் புத்தூர் கிராமத்தில் வாய்க்கால் பாலத்தின் சுவற்றில் இரு சமுதாயத்தினரை விமர்சனம் செய்து தகாத அவதூறு வார்த்தைகளால் கைகளால் எழுதப்பட்ட துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டிருந்தது. இதனை கண்ட மற்ற இரு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50 பேர் சீலைப்பிள்ளையார் புத்தூர் கிராமத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு காட்டுப்புத்தூர் காவல் நிலையம் வரை நடந்து சென்று அங்கிருந்த காவல் ஆய்வாளர் முத்தையனிடம் புகார் மனு அளித்தனர். புகார் மீது உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர்.

இதனை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலந்து சென்றனர். சாதிய ரீதியான சர்ச்சையால் போராட்டம் எழுந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

ஒரு சமுதாயத்தினரை அவதூறாக விமர்சனம் செய்து துண்டு பிரசுரம் ஒட்டப்பட்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதால் சீலைப்பிள்ளையார் புத்தூர் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision