திருச்சியில் துப்பாக்கி மற்றும் பயங்கரமான ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது

திருச்சியில் துப்பாக்கி மற்றும் பயங்கரமான ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது

திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, அறிவுரையின்படி திருச்சி மாநகரில் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பவர்களை கண்காணித்து, அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையை காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் எடுத்து வருகிறார்கள்.

அதன்படி, இன்று (01.02.2024) கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை ஸ்டேசன் ரோடு உள்ள தனியார் லேத் பட்டறையில் சட்டத்திற்கு விரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்றும், அங்கு சட்டத்திற்கு விரோதமாக பழைய ஏர் பிஸ்டல் ஒன்றும், அதற்கு பயன்படுத்த கூடிய ஈய தோட்டாக்கள், வீச்சு அருவாள்-1,

பெரிய பட்டா கத்தி-1 போன்ற அபாயகரமாக ஆயுதங்களை வைத்திருந்த குமரன் நகரை சேர்ந்த அப்துல் ஹமீது (34), த.பெ.அப்துல் ரஹீம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்க்கொள்ளப்பட்டது. மேலும் விசாரணையில் அப்துல் ஹமீது என்பவர் கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு நபருடனும், திருச்சி கே.கே.நகரை சேர்ந்த ஜியாவுதீன் (38), த.பெ.அப்துல் நாசர் என்பவருடனும் சேர்ந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவருகிறது.

தொடர் விசாரணையில் ஜியாவுதீன் என்பவரிடமிருந்து ஒரு ஏர்பிஸ்டல் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்படி எதிரிகளான அப்துல் ஹமீது மற்றும் ஜியாவுதீன் ஆகியோர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், கைது செய்தும், ஆயுதங்களை கைப்பற்றியும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision