மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள வாடுகளில் குடிநீரில் கழிவு நீர் கலக்கப்படுவதாக சிபிஎம்-மேயரிடம் மனு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக்குழு தலைவர் எஸ். ஸ்ரீதர் தலைமையில் மேற்கு பகுதி செயலாளர் ரபீக்அஹமது திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது :திருச்சிராப்பள்ளி மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மண்டலம் 5-ல் உள்ள அனைத்து வார்டுகளிலும் குடிநீரில்
கழிவுநீர் கலக்கப்படுவதாக மக்கள் கடந்த சில நாட்களாக போராடி வருகிறார்கள். மின்னப்பன் தெருவில் இதனால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் கூறுகிறார்கள். நாங்கள் சென்று பார்த்த வகையில் பழைய புதை வடிகால். புதிய புதை வடிகாலுடன் இணைக்கப்படாமல் உள்ளது. இதனால் கழிவு நீர் குடிநீரில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. உடனடியாக
புதியகுடிநீர் குழாய் இணைக்கும் பணியை துவக்கி சுகாதாரமான முறையில் மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை தொடர்ந்து சுத்தம் செய்து சுகாதாரமான, பாதுகாப்பான குடிநீர் வழங்க பணியாளர்களை கூடுதலாக நியமித்து வேண்டும். பாதாள சாக்கடை குழாய் குடிநீர் குழாய்க்கு மேல் பகுதியில் உள்ளதால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.மேஜர் சரவணன் சாலை துவக்கத்தில் இருந்து
மத்திய பேருந்து நிறுத்தம் வரையிலுள்ள சாலையில் பாதாள சாக்கடைக்கான மேன்ஹோல்கள் பள்ளமாக உள்ளதால் இந்த பள்ளங்களால் ஏற்பட உள்ள விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும். வார்டு எண் 27ல் உள்ள ஜெனரல் பஜார் சந்திப்பிலிருந்து பட்டாபிராமன் சாலை மாருதி மருத்துவமனை வரை சாலையின் நடுவே நீண்ட பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள் எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அவர் அந்த மனுவில் கூறியிருந்தார். இதேபோன்று பகுதிக்குழு உறுப்பினர் அப்துல் கையூம்
மேயரிடம் கொடுத்த மனுவில் திருச்சி தில்லைநகர் பத்தாவது கிராசில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு நிழற்குடை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.மனுவை மேயரிடம் கொடுத்த போது மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், கிளை செயலாளர் சுப்பு, பகுதிக்குழு உறுப்பினர் ஆசிக் அலி, அக்பர்லி ஆகியோர் உடன் இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision