பெண்ணுக்கு பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தாக விஷ்வ இந்து பரிஷத் மாநில செயற்குழு உறுப்பினர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

பெண்ணுக்கு பாலியல் தொல்லை மற்றும் கொலை மிரட்டல் விடுத்தாக விஷ்வ இந்து பரிஷத் மாநில செயற்குழு உறுப்பினர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் என்.ஆர்.என். பாண்டியன், இவர் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.

இவருடைய வீட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு 2 மாத காலம் மணிமேகலை (45) என்பவர் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலை செய்து வந்த மணிமேகலையிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதால் வேலையை விட்டு நின்று விட்டார். மேலும் வேலைக்கு வர சொல்லி அழுத்தம் கொடுத்தும் மணிமேகலை வேலைக்கு வராததால் ஆத்திரமடைந்த பாண்டியன்

மணிமேலையை தகாத வார்த்தைகளால் திட்டி சம்பவத்தை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய என்.ஆர்.என் பாண்டியன் மீது நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த விவகாரத்தில உயர்நீதி மன்றம் நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு உத்தரவிட்டதையடுத்து, மணப்பாறை அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா, என்.ஆர்.என் பாண்டியன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision