சமுதாய வளைகாப்பு விழா - கர்ப்பிணிகளுக்கு மரக்கன்று வழங்கிய அமைச்சரின் மனைவி
சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 100 கர்ப்பிணி பெண்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கத்தில் சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், பிரதீப் குமார் , மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், சட்டமன்ற ஸ்ரீரங்கம் தொகுதி உறுப்பினர் பழனியாண்டி ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி இவ்விழாவை தொடங்கிவைத்தனர்.
இவ்விழாவில் பங்கேற்று மருத்துவர்கள், தாய்-சேய் நலனை பதுகாப்பதற்கு தேவையான வழிகாட்டுதல்களை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கினார்கள். மேலும் ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும், தாய் பாலின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார்கள்.
மாலையுடன் வரிசையாக நாற்காலிகளில் அமரவைக்கப்பட்டிருந்த 100 கர்ப்பிணிகளுக்கும் வளையல், வேப்பிலைக்காப்பு, மாங்கள்ய கயிறு, இனிப்பு பலகாரம், ஜாக்கெட் துணி, தேய்காய், சாத்துக்குடி பழம், வாழைப்பழம், பேரீச்சம்பழம், மஞ்சள், குங்குமம், அறுசுவை உணவுடன் கூடிய வெற்றிலைபாக்கு ஆகியற்றை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
இந்நிகழ்வில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்... கர்ப்பிணி பெண்களுக்கு தாங்கள் விரும்பியபடி ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ பிறக்க எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 100 கர்ப்பிணி பெண்களுக்கு திருச்சி பொன்மலைப்பட்டியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது மனைவி ஜனனி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் 100 கர்ப்பிணிகளுக்கும் வளையல், வேப்பிலைக்காப்பு, மாங்கள்ய கயிறு, இனிப்பு பலகாரம், ஜாக்கெட் துணி, தேய்காய், சாத்துக்குடி பழம், வாழைப்பழம்,பேரீச்சம்பழம், மஞ்சள், குங்குமம், அறுசுவை உணவுடன் கூடிய வெற்றிலைபாக்கு சீர்வரிசைகளையும் ரொக்கத்தையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்சியில் அமைச்சர் மகேஷ் பேசியதாவது... இந்த விழாவில் அமைச்சர் என்ற முறையில் இல்லாமல் உங்களுடைய சகோதரனாக கலந்து கொண்டு உங்களுக்கு சீர்வரிசை வழங்குவதாகவும், மகப்பேறு காலத்தின் உங்களது உள்ளங்களை நல்ல முறையில் வைத்துக் கொள்ள வேண்டும் அது உங்களது வயிற்றில் வளரும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும். மேலும் தமிழக முதல்வர் பெண்கள் முன்னேற்றத்திற்காக இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.
இந்த சமுதாய வளைகாப்பு திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கொண்டு வந்தது வசதி படைத்தவர் தங்களது பெண்களுக்கு வளைகாப்பு நடத்த முடியும். ஆனால் ஏழை - எளிய கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்த முடியவில்லை என்ற ஏக்கத்தை போக்குவதற்காக இது கொண்டுவரப்பட்டது. இந்த கற்ப காலத்தில் நீங்கள் உங்களை பேணி பாதுகாக்க வேண்டியது ஒரு உயிர் அல்ல இரண்டு உயிர் அதை உங்களது குடும்பத்தாரும் உணர்ந்து செயல்பட வேண்டும் நான் தாய் வீடாக நினைக்கும் திருவெறும்பூர் தொகுதியில் நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்வதில் பெருமை அடைவதாக கூறினார்.
இந்த விழாவில் திருச்சி டிஆர்ஓ அபிராமி திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் பார்த்தசாரதி, டாக்டர் ரஷ்யா தேவி உட்பட அரசு அலுவலர்களும், திருச்சி மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன், பொன்மலை பகுதி செயலாளர் தர்மராஜ், கூத்தை பார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision