ஒரே சாதியாக அறிவித்திட வேண்டும் - மக்கள் ராஜ்ஜியம் கட்சி தீர்மானம்

ஒரே சாதியாக அறிவித்திட வேண்டும் - மக்கள் ராஜ்ஜியம் கட்சி தீர்மானம்

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. மண்ணச்சநல்லூர் ஒன்றிய செயலாளர் மணிகண்டன் வரவேற்புரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் ரமேஷ் ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் வடிவேல் தீர்மானங்களை வாசித்தார். காட்சியின் நிறுவனரும், மாநிலத் தலைவருமான இரா. சிவசாமி அரசியல் நிலைப்பாட்டை தற்போது உள்ள அரசியல் களத்தை குறித்து கூட்டத்தில் எழுச்சி உரையாற்றினார். இறுதியாக துறையூர் ஒன்றிய தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவது..... போயர், ஒட்டர், போயாலஸ், ஒட்டர்கள், பெத்த போயர், கொரில்லா தொட்ட போயர், நெல்லூர் பேட்டை ஒட்டர்கள், சூரமாரி ஒட்டர்,தொங்க போயர்,களவாதிலா போயர்,கல் ஒட்டர்,பட்டி,கொட்டா என 13 சாதி பட்டியலையும் ஒன்றாக்கி ஒரே சாதியாக அறிவித்திட வேண்டும். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திய பிறகு தமிழகத்தில் இட ஒதுக்கீடு பகிர்வை மறுசீரமைத்து முன்னேறாத சமுதாயங்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு, கல்வி, வேலைவாய்ப்பு பொருளாதாரத்தில் மட்டும் இல்லாமல் அரசியலில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும், தமிழகத்தில் அன்றாட கூலி வேலை செய்யக்கூடிய சமூகத்தைச் சார்ந்தவர்களும், கடினமான உடல் உழைப்பு மக்களும் அவர்களுக்கு வரக்கூடிய வருமானத்தை மதுவுக்காக அதிகமாக செலவழித்து விடுகிறார்கள்.

ஆகையாலே பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். மதுவுக்கு மாற்றாக தென்னை பனை கள இறக்கி விற்பதுக்கான அனுமதி கொண்டு வர வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தினர். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அன்றாடம் உடல் உழைக்கக்கூடிய சமுதாயங்களும் பொருளாதாரத்தில் பின்தங்கிய சமுதாயங்களும் செல்வதுண்டு. சில மருத்துவமனைகளில் சரியான பராமரிப்பு இல்லாத சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி அணுகுமுறையும் குறைபாடாக உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அணுகுமுறை குறைபாடாக உள்ளது. சில அரசு மருத்துவமனைகளில் தனியாருக்கு நிகரான அரசு மருத்துவமனைகளும் அதில் பணியாற்றக்கூடிய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அணுகு முறையில் சரியாக நடந்து கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் மக்கள் ராஜ்ஜியம் கட்சியின் நிறுவனரும், மாநிலத் தலைவருமான இரா. சிவசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்.....போயர், ஒட்டர், போயாலஸ், ஒட்டர்கள், பெத்த போயர், கொரில்லா தொட்ட போயர், நெல்லூர் பேட்டை ஒட்டர்கள், சூரமாரி ஒட்டர்,தொங்க போயர்,களவாதிலா போயர், கல் ஒட்டர், பட்டி, கொட்டா என 13 சாதி பட்டியலையும் ஒன்றாக்கி ஒரே சாதியாக அறிவித்திட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளோம். மேலும் எங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றாத பட்சத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு எங்களது வாக்கு வங்கியின் பலத்தை காட்ட உள்ளோம் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision