நட்சத்திர அந்தஸ்து பெற்ற திருச்சி பாராளுமன்ற தொகுதியில் துரை வைகோ போட்டி
திருச்சி பாராளுமன்ற தொகுதியிக்கு திமுக கூட்டணி கட்சிகள் காங்கிரஸ், மதிமுக இடையே கடும் போட்டி நிலவுவதாக இருந்தது. ஆனால் கண்டிப்பாக திருச்சி தொகுதி காங்கிரஸ்க்கு கிடையாது என திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் காங்கிரசுக்கு திருச்சி தொகுதி மறுக்கப்பட்டு மதிமுகவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதிமுகவின் நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் இன்று மதியம் நடைபெற உள்ளது. அதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனும், முதன்மைச் செயலாளருமான துரை வைகோ திருச்சியில் போட்டியிடுவார் என்ற தகவல் வெளியிடப்பட உள்ளதாக உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு மதிமுக சார்பில் எல்.கணேசன் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பிறகு மீண்டும் 20 ஆண்டுகள் கழித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக துரை வைகோ தனிச் சின்னத்தில் போட்டியிடுவார் என்பது உறுதியாகி உள்ளது.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகள் முடிவு செய்யப்பட்டு வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஓரிரு நாட்களில் அவர்களும் வேட்பாளர்களை அறிவித்து விடுவார்கள். திருச்சி பாராளுமன்ற தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்று தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision