இந்தியாவின் உதவியினால் பொருளாதாரக் கட்டமைப்பு மேம்பட்டு வருகிறது- இலங்கை எம்பி ராதாகிருஷ்ணன் திருச்சியில் பேட்டி.

இந்தியாவின் உதவியினால் பொருளாதாரக் கட்டமைப்பு மேம்பட்டு வருகிறது- இலங்கை எம்பி ராதாகிருஷ்ணன் திருச்சியில் பேட்டி.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் திருச்சி மாவட்டம் முசிறிக்கு வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்..... இலங்கையில் தற்போது 73-ஆண்டுகளுக்கு பின்பு மூன்றாவது முறையாக மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களை பெற்று 159 உறுப்பினர்களை கொண்டு தற்போது புதிதாக அமைந்துள்ள ஆட்சி பதவி ஏற்று ஒரு மாத காலம் ஆகிறது.

வரும் காலங்களில் இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினை குறித்து அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இலங்கையின் பொருளாதார கட்டமைப்பு குறித்த கேள்விக்கு ... இலங்கையில் பொருளாதார வளர்ச்சி இந்திய அரசின் நல்லுறவு மூலமாக மேம்பட்டு வருகிறது. இலங்கை அரசு பொருளாதார வளர்ச்சி அடையும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார்.

தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்து தங்கள் கருத்து என்ற கேள்விக்கு பதில் அளித்த எம்.பி ராதாகிருஷ்ணன்.... இலங்கைக்கும் தமிழகத்திற்கும் உள்ள உறவு தொப்புள் கொடி உறவு. இந்த உறவு நல்ல முறையில் நிலைத்து நிற்கும். இந்த நல்லுறவை எந்த ஒரு சக்தியாலும் பிரிக்க முடியாது. இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பதற்கு இந்தியா துணை நிற்கும் என்று தெரிவித்தார். 

இலங்கை அதிபர்கள் இந்தியா வருகை தந்ததை எவ்வாறு பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு..... இலங்கையில் புதிதாக பொறுப்பேற்ற அதிபர்கள் இந்திய பிரதமரை சந்திப்பது ஒரு சம்பிரதாய நிகழ்ச்சி. இதன் மூலம் இந்தியா இலங்கை உறவு மேம்படும் என்று அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision