திருச்சி மாநகரில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 7 மாதங்களில் 101 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சி மாநகரில் 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த 7 மாதங்களில் 101 பேர் குண்டர் சட்டத்தில் கைது

 

திருச்சி மாநகரில் கடந்த 20 வருடங்களில் இல்லாத வகையில் இந்த வருடம் ஏழே மாதங்களில் பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாக 80 நபர்கள் மீதும், மருந்து சரக்கு குற்றவாளிகள் 11 நபர்கள் மீதும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 4 நபர்கள் மீதும், இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 நபர்கள் மீதும், பெண்களை ஆபாசமாக மிரட்டி பணம் பறித்த வழக்கில் 1 மீதும், கள்ளசந்தையில் ரேசன் அரிசியை கடத்தியதாக 1 மீதும் ஆக திருச்சி மாநகரத்தில் இந்த ஆண்டு இதுவரையில் மொத்தம் 101 நபர்கள் அதிரடியாக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.

திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டை விட, நடப்பாண்டில் கொலை மற்றும் குற்றச்சம்பவங்கள்வெகுவாக குறைந்துள்ளது.

திருச்சி மாநகரத்தில், சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்டநடத்தைக்காரர்கள், வழிப்பறி குற்றச்சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் ‌ தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO