திருச்சி தெற்கு மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் சிலை திறப்பு விழா !
கழகத் தலைவரின் அறிவுறுத்தலின்படி, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் இதுவரை 75 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டு தற்போது 76வது நிகழ்ச்சியானது, கலைஞர் நூற்றாண்டு விழாவில் மற்றொரு நிகழ்வாக சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிலை என்ற அடிப்படையில்
திருச்சி தெற்கு மாவட்டத்தில் திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை 25.01.2024 வியாழக்கிழமை காலை 8 மணிக்கு திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவ சிலையை கழக தலைவர் - தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார் . விழாவுக்கு கழக முதன்மை செயலாளரும் - நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு முன்னிலையிலும் எனது தலைமையிலும் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட ,வார்டு, கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், மாநகராட்சி, ஒன்றிய நகர, பேரூர் கழக சேர்மன்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision