திருச்சி மாநகரை பசுமையாக்க ஷைன் திருச்சி அழைப்பு

திருச்சி மாநகரை பசுமையாக்க ஷைன் திருச்சி அழைப்பு

"நம்ம மரம் நம்ம திருச்சி" என்கிற தலைப்பில் திருச்சியின் 65 வார்டுகளிலும் மரம் நட்டு பராமரிக்க தன்னார்வலர்கள் தேவை என்று ஷைன் திருச்சி அமைப்பினர் அழைப்பு விடுத்திருக்கின்றனர். 

திருச்சி மாநகரை மேலும் தூய்மை படுத்தவும் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கத்துடனும் பல்வேறு நிகழ்வுகளை கடந்த 7 வருடங்களாக மேற்கொண்டு வருகன்றனர் ஷைன் திருச்சி அமைப்பினர். சிறு குழந்தைகள் முதல் பெரிவர்கள் வரை, பலரும் குடும்பத்துடன் இந்நிகழ்வுகளில் பங்கேற்கிறார்கள். 

கொரோனா காலத்தில் ஏற்பட்ட ஆக்சிசன் பற்றாக்குறையை மனதில் கொண்டு, திருச்சி மாநகரின் 65 வார்டுகளிலும் மரம் நடும் நிகழ்வை தற்போது ஏற்பாடு செய்துள்ளது இந்த அமைப்பு. நம்ம மரம் நம்ம திருச்சி என்கிற தலைப்பை கொண்டு திருச்சியில் மரம் நட்டு பராமரிக்க ஆர்வுமுள்ள தன்னார்வலர்களை பங்கேற்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மரக்கன்றுடன் அவற்றை பாதுகாக்க கூண்டுகளையும் சேர்த்தே வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் ஷைன் திருச்சி அமைப்பை சேர்ந்தவர்கள். மேலும, கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆக்சிசன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களுக்கு இந்நிகழ்வு சமர்ப்பணம் என்றும் தெரிவிக்கின்றனர் ஒருங்கிணைப்பாளர்கள். 

இந்நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் 9901965430 மற்றும் 9789706095 என்கிற எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம். 

அது மட்டுமல்லாது, 
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfxVbH2kuIouzM2UcUVW3XpUVGO3Nm4NqQKgFDTKFpWhROohQ/viewform?usp=sf_link 


மூலமும் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu