கொரோனா தொற்று பரவும் இடமாக மாறி வரும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

கொரோனா தொற்று பரவும் இடமாக மாறி வரும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்

பொதுமக்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு மூலம் தீர்வு காணும் வகையில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் ஆனது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பு வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ள. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் கொண்டு வரப்படும் மக்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. நாள்தோறும் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் போராட்டம் அதிகமாக நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் முகக்கவசம் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூறுவதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழல் உருவாகிவருகிறது. கொரோனா தொற்றை குறைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதி வைரஸ் தொற்று பரவும் இடமாக மாறி வருவது வேதனை அளிப்பதாகவும்

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தனி கவனம் செலுத்தி இனிமேலாவது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல் தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை வைத்திருந்தனர். திருச்சியில் கொரோனா தொற்று 3வது அலை அதிகரித்து வருவதாக மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்தது குறிப்பிடதக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu