வீட்டில் உள்ள காரை பெயர்ந்து விழுவது போல் இங்கு விழுந்துள்ளது. இது ஒரு பிரச்சனையா? ஶ்ரீரங்கத்தில் அமைச்சர் நேரு பதில்

வீட்டில் உள்ள காரை பெயர்ந்து விழுவது போல் இங்கு விழுந்துள்ளது. இது ஒரு பிரச்சனையா? ஶ்ரீரங்கத்தில்  அமைச்சர் நேரு பதில்

திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுரம் (விருமன்) கோபுர காரைகள் பெயர்ந்து விழுந்ததை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு அறநிலை துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர்பாபு (05.08.2023) அன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் கிழக்கு வாசல் தாமோதர கிருஷ்ண கோபுரத்தின் ஒரு பகுதி காரை விழுந்ததால் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்வது குறித்து தமிழக முதல்வர் உத்தரவு விட்டதுக்கு இணங்க நேற்றைய முன்தினம் அமைச்சர் நேரு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தனர்.

ஒட்டுமொத்தமாக திருக்கோவிலில் இருக்கின்ற 21 கோபுரங்களையும் தேசிய தொழில்நுட்ப வல்லுனர்களிடம் ஆய்வு செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று தேசிய தொழில்நுட்பக் கழக வல்லுநர்கள் ஆய்வு செய்தனர் ஓரிரு நாளில் அறிக்கை தருவதாக கூறியுள்ளனர்.இந்த கோபுரம் மட்டும் இல்லாமல் 21 கோபுரங்களையும் ஆய்வு செய்து சிறத்தன்மை அறிக்கை கேட்டிருக்கின்றோம். அது வந்த உடன் உடனடியாக பணிகளை துவங்க்குவதற்கு திட்டமிட்டு இருக்கின்றோம். 2012ம் ஆண்டு 34 லட்சம் செலவில் இந்த கோபுரத்தின் பழுதுபார்ப்பு பணி நடைபெற்று இருக்கின்றது.

தற்போது 94 லட்சம் செலவில் புனரமைப்பு பணிக்கு திட்டமிட்டு ஆணையிரிடம் ஒப்புதலும் அளிக்கப்பட்டு இருக்கின்றன. கிழக்கு கோபுரத்தின் ஒன்று, இரண்டு, மூன்று நிலை மரங்கள் முழுவதுமாக சிதலமடைந்து இருப்பதால், ஒரு சிலட யர்களில் மரங்கள் சிதலம் அடைய இருப்பதாலும் முழுவதுமாக இந்த கோபுரத்தை பராமரிப்பு பணி செய்ய திட்டமிட்டு இருக்கின்றோம். 2 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவித்து இருக்கிறார்கள். 2 கோடி ரூபாய் கோவிலில் போதுமான அளவு நிதி இருப்பதால், அதே நேரத்தில் நன்கொடையாளர்கள் இந்த பணியை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் கலந்து ஆலோசித்து நன்கொடையாளர்களா அல்லது திருக்கோவில் நிதியா என்பதை முடிவு எடுக்க இருக்கின்றோம்.

உடனடியாக பணிகளை துவங்குவதற்கான போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும். மரங்கள் மற்றும் சுதை வேலைகள் இருப்பதால் இந்தப் பணி முடிவதற்கு ஓராண்டுக்கு மேலாகும் என குறிப்பிட்டு இருக்கிறார்கள். 21 கோபுரங்களிலும் ஆய்வு செய்து அதில் ஏதாவது பழுது இருந்தால் நிச்சயம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சரி செய்யப்படும்.

6 மாதத்துக்கு முன்பு இது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு.... அமைச்சர் நேரு குறுக்கிட்டு பதிலளித்த போது.....வீட்டில் உள்ள காரை பெயர்ந்து விழுகிற மாதிரி இங்கு விழுந்து உள்ளது. ஆறு மாதத்துக்கு முன்பே இது குறித்து ஆய்வு செய்து டெண்டருக்கான நிதி ஒதுக்கி இப்போது 94 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பிரச்சனை என்று சொல்கிறீர்களே என்றார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision