சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வாபர் சமாதிக்கு செல்வது தவறு - விஷ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் தீர்மானம்

சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் வாபர் சமாதிக்கு செல்வது தவறு - விஷ்வ ஹிந்து பரிஷத் கூட்டத்தில் தீர்மானம்

விஷ்வ ஹிந்து பரிஷத் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவை கூட்டம் ஸ்ரீரங்கம் ராகவேந்திர மடத்தில் நடைபெற்றது. இதில் விசுவ ஹந்து பரிசத் அகில பாரத தலைவர் ஶ்ரீமான் அலோக்குமார் ஜி தலைமை தாங்கினார். 40 மடங்களை சேர்ந்த மடாதிபதிகள் கலந்து கொண்டனர்.

அவனாசி காமாட்சி, ஏகாம்பரதா ஸ்வாமிகள், தென்தமிழக ராமகிருஷ்ணா ஜி, திருச்சி மாவட்ட தலைவர் சுதாகர் திலக், தமிழ்நாடு அண்ணா காமாட்சிபுரி ஆதீனம் மெஷின் சுவாமிகள், சின்மயா மெஷின் சுவாமிகள், ராமகிருஷ்ண தவாபன சுவாமிகள், பாலாஜி ஜி, ஆர் வீரவநல்லூர் ஜி, ஆர் ஸ்ரீரங்கம் ஜி ஆர் புருஷோத்தமஞ்சியர், மன்னார்குடி ஜீயர் முனி வாகன ஜி, ஆர் தேனி ஓம்கார ஆனந்த மடம் அகில பாராத சன்னியாசிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் இணை செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் சென்னிமலை, வெள்ளிமலை, சைதன்யா சுவாமிகள் திருவண்ணாமலை திருப்பாத சுவாமிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில்.., தீர்மானம் - 1 : தூய்மையான புனிதமான, பூஜைப்பொருட்களை இறைவனுக்கு வழங்குதல். ஹிந்துக்கள் வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்தும் பொருட்களிலும் ஆலயங்களில் பக்தர்களுக்கு வழங்கும் பிரசாதம் போன்ற பொருட்கள் புனிதம் இழந்து தூய்மையிழந்து காணப்படுகிறது. குறிப்பாக விபூதி, குங்குமம், தேன், சந்தனம்,எண்ணெய், நெய் போன்ற பொருட்களில் கலப்படம் மிகுந்து தூய்மையிழந்தும் காணப்படுகிறது. குறிப்பாக திருக்கோவில் களில் தீபம் ஏற்ற வழங்கப்படும் நெய் முழுமையாக கலப்படமாக உள்ளது. அது போலவே திருநீறு, குங்குமத்தில் போலியான மாற்றுப்பொருட்கள் கலந்திருக்கின்றது. இறைவனுக்கு அபிஷேகத்திற்கு வழங்கப்படும் பசும்பால் என்ற பெயரில் கவர் பாலே பயன்படுத்தப்படுகிறது.

ஆகவே ஹிந்துக்கள் யாவரும் ஹிந்துக் கடைகளிலேயே ஹிந்து தயாரிப்பு பொருட்களை மட்டுமே வாங்கி இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று இந்த துறவியர் கூட்டம் மக்களையும் பக்தர்களையும் கேட்டு கொள்கிறது மேலும் தமிழக அரசில் வருவாய்துறைக்கு அடுத்தபடியாக ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகமான வருமானம் ஈட்டுகின்றது. ஆனால் திருக்கோவில் களில் தரமற்ற மட்டமான பொருட்களில் தயாரான விபூதியும். குங்குமம், சந்தனம், மஞ்சள், பிரசாதம் என்ற பெயரில் வழங்கப்படுகின்றது. இறைவனின் பெயரில் அரசே தரமற்ற பொருட்களை வழங்கி பக்தர்களை ஏமாற்றுகின்றது. ஆகவே அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் உள்ள கோயில்கள் சாஸ்திர முறைப்படி கூறப்பட்டுள்ள தூய்மையான பிரசாதங்களை வழங்க வேண்டும் என்று துறவியர்கள் அரங்கம் அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறது. அதுபோல பூஜைக்காக பிளாஸ்டிக் தகரம், இரும்பு, எவர்சில்வர் போன்ற பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று இச்சபை மக்களை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 2 : திருக்கோவில்களில் ஸ்தல வரலாறுகளை திருத்தி மாற்றி எழுத அறநிலையத்துறை முயற்சித்து வருவதை இத்துறவியர் அரங்கம் கண்டிக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஸ்தலம்,மூர்த்தி, தீர்த்தம் என்று புனிதமாக போற்றப்பட்ட பல பல திருத்தலங்களில் திருக்கோவில்களில் தல வரலாறு எழுதப் பட்டுள்ளன அங்கே திருக்கோயில்கள் அமைந்த ஸ்தலங்களுக்கு ஏற்ப தெய்வீக பின்னணியும் உள்ளது தெய்வீக திருவிளையாடல்கள் செய்த திருத்தலங்கள் இறைவன் தங்களுடைய பக்தர்களை தடுத்தாட்கொண்ட அருங்காட்சி கொடுத்த தளங்கள் தேவர்கள் அசுரர் முதற்கொண்டு ரிஷி முனிவர்கள் மகான்கள் அரசர்கள் அருளாளர் பெருமக்கள் ஏன் சாமானிய மக்களும் இறைவனை நோக்கி கடந்தவன் இயற்றிய இடங்கள் தெய்வீக ஆற்றல் வாய்ந்த திருத்தலங்கள் திருக்கோவில்கள் காட்டப்பட்டன இப்படி காலம் காலமாக போற்றப்பட்ட ஒவ்வொரு திருக்கோயில்களில் பல அருளாளர்களால் போற்றப்பட்டது பல மகான்கள் தீர்க்கதரிசிகள் சித்த புருஷர்கள் அங்கு எழுந்தருளி இறைவனை போற்றி வணங்கி முத்தி பெற்றார்கள் இத்திருத்தலங்களில் இறைவன் எண்ணற்ற தன் பக்தர்களுக்காக எண்ணற்ற நிலைகளை செய்து பக்தர்களை ஆனந்தப்படுத்தி உள்ளார் இவ்வாறு ஒவ்வொரு திருக்கோவில்களிலும் நடந்த பல அற்புதங்களை செய்யுள்ளாக ஸ்லோகங்களாக பாடியுள்ளனர் பல பழனியில் நிகழ்வுகள் அந்தந்த திருக்கோவில்கள் கல்வெட்டாக பதிக்கப்பட்டுள்ளது. இறைவனிடம் ஆழ்ந்த பக்தி கொண்டுள்ளவர்கள் அறிஞர்கள் முனிவர்கள் ஒவ்வொரு திருக்கோவில் தல வரலாறுகளை மேற்கண்ட ஆதாரங்களைக் கொண்டு தொகுத்து அதனை ஸ்தல புராணங்களாக நமக்கு வழங்கி உள்ளார்கள் ஸ்ரீ ஆதிசங்கர ஸ்ரீ ராமானுஜர் ஆழ்வார்கள் நாயன்மார்கள் அருணகிரிநாதர் போன்றவர்கள் திருக்கோவில் கோவிலாக சென்று பாடி திருமுறை பதிகங்கள் பாசுரங்கள் ஸ்லோகங்கள் தோத்திரங்கள் இவற்றின் அடிப்படையாகக் கொண்டு தலபுராணங்கள் கொடுக்கப்பட்டன. இவற்றை எழுதியவர்கள் எந்த வித பிரதிபலனையோ பண பலனையோ ஆதாயத்தையோ எதிர்பார்த்து எழுதவில்லை ஆனால் தற்காலத்தில் இறை நம்பிக்கை அற்ற திராவிட மாநில அரசாங்கத்தின் கீழ் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உண்மையான தல வரலாறுகளை எழுதுகிறேன் என்ற பெயரில் பழைய தல புராணங்களை தற்போது கடவுள் நம்பிக்கை அற்ற தெய்வீக ஆற்றல் தவம் அற்ற நபர்கள் மூலம் எழுதுகிறது இதனை விஷ்வ ஹிந்து பரிஷத் வழி நடத்தும் இந்த துறவையர்கள் அருளாளர்கள் பேரவை வன்மையாக கண்டிப்பதுடன் இம்முயற்சியை கைவிட வேண்டும் என்றும் இதற்காக வீணடிக்கப்படும் அறநிலையத்துறை பெறும் நிதி செலவு செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது

தீர்மானம் - 3 : நீரின்றி அமையாது உலகு. பாரத தேசத்தில் வடக்கே இமயமலையில் தோன்றும் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா நதி முதல் தெற்கே குமரியில் தாமிரபரணி கோதையாறு வரை எண்ணில் அடங்கா நதிகளும் தீர்த்தங்களும் இந்த பூமியை புனிதப்படுத்தி நமது தேசத்தை வளப்படுத்தி பல நவன்களை வாரி வழங்கி வருகின்றது இந்த பூமி செழிக்க செய்த இந்த நதிகளை புனிதமான பவித்திரமாக போற்றி பாதுகாத்து வருகின்றார்கள் மக்களிடம் ஆன்மீக விழிப்புணர்வை குறைந்தாலும் பக்கிஸ்ரத்தை குறைந்ததாலும் மாற்று மதத்தினராலும் இந்த புனிதமான நதிகள் புனிதமிழந்து கழிவுகள் கலந்து தூய்மை இழந்து பாழ்ப்பட்டு வருகின்றது மேலும் நதிநீர்களை பாதுகாக்க வேண்டிய அரசாங்கத்தின் உள்ளூர் நிர்வாகம் நதிகளில் கழிவு நீர் கலக்க வைப்பதுடன் குப்பைகூளங்களையும் சாக்கடைகளையும் கலந்து நதிகளை பாழ்படுத்தி வருகிறது இதை இந்த துறவியர்கள் சபை வன்மையாக கண்டிக்கிறது மேலும் இந்த நதிநீர்களை தூய்மைப்படுத்தி புனிதத்தை பாதுகாக்க அரசு ஓய்வு பெற்ற நீதிபதிகளின் தலைமையில் சமூக ஆர்வலர்கள் இயற்கை ஆர்வலர்கள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் நமது மாநிலத்தின் முக்கியமான பிரமுகர்கள் ஆன்மீக தலைவர்கள் தலைமையில் மாநில அளவில் நதிநீர் பாதுகாப்பு ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டியும் அதற்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் அளிக்கும்படி இந்த சபை அரசாங்கத்தை வேண்டுகிறது.

தீர்மானம் - 4 : அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு. எங்கெங்கும் திருக்கோயில்கள் புனித நீர் திருத்தலம் என்று தமிழக முழவதும் எண்ணற்ற திருக்கோவில்கள் தெய்வீக மனத்தை பரப்பி மாநிலத்தை தெய்வீக மனம் கமல செய்து தெய்வீக தமிழகம் என்று போற்றப்பட்டு வருகின்றது தமிழகத்தில் நன்னும் உயர்ந்து நிற்கும் லட்சக்கணக்கான திருக்கோவில்களில் 40,000-ற்கும் மேற்பட்ட திருக்கோவில்கள் அரசின் நிர்வாகத்தில் பால் பட்டு கிடக்கின்றன உயர்ந்து நிற்கும் மதில்களையும் நீண்ட பிரகாரங்களையும் 16 கால் மண்டபம் நூறு கால் மண்டபம் ஆயிரம் கால் மண்டபம் என்று பெரிய மண்டபங்களையும் மணிமண்டபம் சபா மண்டபம் அர்த்தமண்டபம் கருவறை வரை அனைத்தையும் சுற்றவிகளாக உயர்ந்த தொழில்நுட்பத்துடன் சிற்ப வேலைபாடுகள் கொண்ட பொருச்சித்திரங்களாக நிகழும் திருக்கோவில்களுக்கு அரசர்களும் பெரும் கொடையர்களும் எண்ணில் அடங்கா சொத்துக்களையும் நிலம் புலன்களையும் ஆஸ்திகளையும் வழங்கி திருக்கோயில்களை போற்றி பராமரித்து பாதுகாத்து பொலிவுடன் நிகழச்செய்தார்கள் இத்தகைய பெருமை வாய்ந்த திருக்கோவில்களில் எழுந்தருளி அருள் பாலிக்கும் இறைவனை வணங்கி மகோன்னதமானவை எல்லாம் இறைவனுக்கே என்று பட்டு பிதாம்பரங்களையும் பொன் வெள்ளி களையும் நவரத்தினங்களையும் தவமணிகளையும் வழங்கி இறைவனை அலங்கரித்து இறைவனை ஆனந்தமாக பகிர்ந்து வழிபட்டார்கள் நம் மன்னர்கள் அரசாட்சி காலத்தில் திருக்கோவில்கள் எல்லாம் பக்தி மனம் பரப்ப மக்கள் எல்லா வளங்களையும் பெற்று இன்புற்று பெருவாழ்வு வாழ்ந்தார்கள் கலியன் வந்தான் அத்திய படையெடுப்பு நடந்தது கோவில்கள் தகர்க்கப்பட்டது சொத்துக்கள் கை மாறியது திருக்கோவில்கள் நிர்வாகம் கை மாறியது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அந்திய சதியால் கோடிக்கணக்கான மதிப்பு மிக்க சொத்துக்கள் கொண்ட திருக்கோவில்கள் அரசு நிர்வாகத்திற்கு சென்றது அதற்குப் பின்னர் நாம் சுதந்திரம் பெற்றதன் நாள் நீதி கட்சி காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்தது தெய்வீக நம்பிக்கை அற்றவர்கள் ஹிந்து மதத்தின் பற்று அல்லாதவர்கள் புனிதத்தையும் தைரிய ஆற்றலையும் அறியாதவர்கள் ஆட்சி நிர்வாகத்திற்கு வந்ததால். திருக்கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை என்ற பெயரில் அரசு நிர்வாகத்திற்கு சென்றது. அரசியல்வாதிகளும் திராவிட மாடல் ஆட்சியாளர்களாலும் திருக்கோவில் சொத்துக்கள் கொள்ளை யடிக்கப்பட்டன ஆக்கிரமிக்கப்பட்டன பல்லாயிரம் சொத்துக்கள் நில புலன்கள் நிர்வாக சீர்கேடுகளால் வருமானம் இழந்து திருக்கோவில்கள் பொலிவிழந்து நித்திய பூஜைகள் தடைபட்ட ஆலயங்களில் நித்திய பூஜை கோ பூஜை விளக்கேற்றவோ வலியில்லாமல் திருக்கோவில்கள் மோசமான நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது அறநிலையத்துறை நிர்வாகத்தில் பல கோவில்கள் பாழ் பட்டு சீர்கெட்டு சிதிலம் அடைந்து அவல நிலைக்கு உள்ளாகி உள்ளது. திருக்கோவில்கள் ஆர்வலர்கள் பல பிரச்சனைக்காக நீதிமன்றத்தை அணுகி திருக்கோவில் சார்பாக தொடுக்கப்பட்ட பல வழக்குகளுக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்புகள் வழங்கியும் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் சட்டத்தின் பெயரிலும் பொறுப்பற்ற அதிகாரிகளின் செயல்களாளும் நல்ல தீர்ப்புகள் அமல்படுத்தப்படாமல் செயலிழந்து நிற்கின்றது இந்த அவலமான மோசமான நிலை நீங்கி திருக்கோயில்கள் யாவும் நல்ல நிர்வாகத்தில் பொலிவுடன் திகழ ஒரே வழி அரசே ஆலயத்தை விட்டு விலக வேண்டும் திருக்கோயில்கள் யாவும் சான்றோர்கள் அறவோர்கள் அருளாளர்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் அறிவு சார்ந்த பக்தி மிக்க பிரமுகர்கள் உறுப்பினர்களை உறுப்பினர்களாக கொண்டு சுய அதிகாரம் கொண்ட வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்து அறவியர்கள் உறுப்பினர்களாக கொண்ட இந்த அருளாளர்கள் சபை கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் - 5 : வக்ப் போர்டு ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்பது தொடர்பாக பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாக அப்போதைய அரசர்களாலும் ஆன்மீக பெரியோர்களாலும் கட்டப்பட்ட கோவில்களையும் அதற்குரிய அசையும் அசையா மற்றும் இதர சொத்துக்களையும் பல ஆண்டுகளாக ஆண்டு அனுபவித்து வந்த அதை நம்பியே வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வரும் பல இந்து மக்களுக்குரிய சொத்துக்களை எந்தவித உரிமையும் இல்லாத வக்ப் போர்டு சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளதோடு தற்போது உரிமை கொண்டாடவும் துவங்கி உள்ளது வக்ப் போர்டின் இந்த செயல் மிகவும் கண்டனத்துக்குரியது மட்டுமல்லாமல் சட்டவிரோதமானதாகும். அரசு அதற்குரிய சட்ட திருத்தங்களை உடனடியாக மேற்கொண்டு முன்பு போலவே திருக்கோயிலுக்கும் திருமடங்களுக்கும் ஹிந்து மக்களுக்கும் உரியதாக்க வேண்டி சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமாறு இந்த சபை தீர்மானிக்கிறது.

தீர்மானம் - 6 : வாபர் சமாதி செல்வது தீட்டு. சபரிமலைக்கு செல்கின்ற பக்தர்கள் சிலரின் தவறான வழிகாட்டுதல்களால் வாபர் சமாதிக்கு சென்று விட்டு சபரிமலை சன்னிதானம் செல்கின்றனர். இத்தகைய செயல் முற்றிலும் தவறானது நமது ஆகமத்திற்கு புறமானது மேலும் இத்தகைய செயல் தவறானது என தேவப்பிரசன்னத்திலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எரிமேலி வாபர் சமாதிக்கு சென்று சபரிமலைக்கு வந்தால் அது தீட்டு என பந்தள அரண்மனையும் அறிவித்துள்ளதை இந்த தீர்மானம் மூலமாக இந்த சபையும் வரவேற்கின்றது. இனியாவது ஐயப்ப பக்தர்கள் இத்தகைய தவறான வழிகாட்டுதல்களையும், ஆகம விதிகளுக்கு புறம்பான செயல்களையும், பின்பற்ற வேண்டாம் என இந்த சபை அறிவுறுத்துகிறது.

தீர்மானம் - 7 : பக்தர்களுக்கு இடையூறு செய்து வரும் அறநிலையதுறை அதிகாரிகளை கண்டித்து தமிழக அறநிலையத்துறையால் நிர்வகிக்கப்பட்டு வரும் சில ஆலயங்களில் அர்ச்சகர்கள் மற்றும் ஆலய சிப்பந்திகள் ஆகம விதிகளுக்கு புறம்பாகவும் கோயிலுக்கு வரும் பக்தர்களை அற்றிலைத்துறையால் நியமிக்கப்பட்ட சிப்பந்திகள் அநாகரிகமாக பேசியும் நடந்தும் அவமானம் செய்யும் விதமாக நடந்து கொள்வதையும் ஆங்கில புத்தாண்டு மற்றும் விசேஷ காலங்களில் ஆகம விதிகளுக்கு புறம்பாக நடு இரவு காலங்களில் ஆலயங்களை திறந்து பூஜைகள் செய்வதை கண்டித்தும் சில ஆலயங்களில் அர்ச்சகர்கள் மற்றும் சிப்பந்திகள் தூய்மை இல்லாமல் வைத்திருப்பதை கண்டித்தும் சில ஆலயங்களில் நடைபெற்று வரும் அன்னதான நிகழ்வுகளுக்கு தடை செய்து வரும் தமிழக அரசை கண்டித்தும் இந்த சபையால் தீர்மானம் நிறைவேற்றப் படுகின்றது.

தீர்மானம் - 8 : திருக்கோயில்களில் ஆங்கில புத்தாண்டு என்ற பெயரில் ஆகம விதி மீறல். ஆங்கில புத்தாண்டு என்ற பெயரில் நள்ளிரவில் திருக்கோயில்களை திறந்து விழா கொண்டாடுகிறோம் என்று அட்டூழியம் செய்கிறார்கள் அன்று சுவாமி சந்நிதி முன் கேக் வெட்டி HAPPY NEW YEAR என்று கோஷமிட்டு இறைவனைப் போற்றி வழிபடுவதற்கு பதில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கேக் வெட்டி பரிமாறிக் கொள்கின்றார்கள் அங்கு இறைவனுக்கு எள்ளளவும் மரியாதை இல்லை இதில் பக்தி இல்லை சிரத்தை இல்லை இது முற்றிலும் இறை வழிபாட்டிற்கு விரோதமான செயலாகும் மேலும் புத்தாண்டு வழிபாடு என்ற பெயரில் பாரம்பரியமான வழிபாடுகளை முற்றிலும் தவிர்த்து திருப்பள்ளி எழுச்சி திருப்பாவை பாடுதல் திருவெம்பாவை வழிபாடு என அனைத்தையும் சிதைத்து சீர்குலைத்து வருகின்றனர். புத்தாண்டு என்ற பெயரில் திருக்கோயிலில் நடைபெறும் ஆகம விதிமுறைகளை அட்டூழியங்களையும் இந்த அருளாளர் சபை வன்மையாக கண்டிக்கிறது. உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision