கார்த்திகேயா பாலிடெக்னிக் - V Dart நிறுவனம் இணைந்து மரக்கன்று நடும் விழா

கார்த்திகேயா பாலிடெக்னிக் - V Dart நிறுவனம் இணைந்து மரக்கன்று நடும் விழா

திருச்சி மணப்பாறையில் கார்த்திகேயா பாலிடெக்னிக் காலேஜில் 150 மரக்கன்றுகளை திருச்சி V Dart நிறுவனம் நட்டு துவக்கி வைத்தது.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மரக்கன்று நடும் திட்டத்தை கார்த்திகேயா பாலிடெக்னிக் காலேஜ் இயக்குநரும் மற்றும் சரஸ்வதி வித்யாலயா தாளாளரும் ஏ.ஆர்.கே அரவிந்த் முதல் மரக்கன்றை நட்டு துவக்கி வைத்தார். கார்த்திகேயா பாலிடெக்னிக் முதல்வர் அருள் உடனிருந்தார்.

இதில் பூவரசு, பாதாம் இலுப்பை, நீர்மருது நெட்டிலிங்கம், சரக்கொன்றை, ஏழுஇலை பாலை உள்ளிட்ட 9 வகையான 150 மரக்கன்றுகள் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து கல்லூரி வளாகம் முழுவதும் நடப்பட்டது. மரகன்று நடும்விழாவில் திருச்சி V Dart நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision