விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடு ஆலோசனைக் கூட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடு ஆலோசனைக் கூட்டம்

வருகிற 'டிசம்பர் 23ஆம் தேதி திருச்சி சிறுகனூரில் நடைபெற உள்ள வெல்லும் ஜனநாயக மாநாடு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே கள்ளி வனத்தாயம்மன் கோயிலில் உள்ள மண்டபத்தில் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றிய துரை மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் குரு அன்புச்செல்வன் கட்சி தொண்டர்களிடம் பேசுகையில்..... வருகிற டிசம்பர் 23ஆம் தேதி வெல்லும் ஜனநாயக எழுச்சி மாநாட்டில் தமிழரின் நினைத்திருந்தால் தமிழகத்தில் உள்ள வேறு மாவட்டத்தில் வேண்டுமானாலும் மாநாடு அமைத்திருக்க முடியும்.ஆனால் எழுச்சித்தமிழரின் திருச்சியில் மாநாடு அமைக்க வேண்டுமேன நினைத்து அந்த மாநாடு நமது மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட சிறுகனூரில் மாநாடு திடல் அமைக்கப்பட்டது.

இருப்பினும் மாநாட்டில் திருச்சி கிழக்கு மாவட்டத்தின் சார்பில் 80 ஆயிரம் சிறுத்தைகளை அழைத்து வர வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் எழுச்சித்தமிழர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உலகமே உற்றுப் பார்க்கும் அளவிற்கு இந்த மாநாட்டினை எழுச்சி தமிழரோடு இணைந்து மாநாட்டை சீரும் சிறப்புமாக நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் குரு அன்புச்செல்வன் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் மண்ணச்சநல்லூர் ஒன்றிய பொறுப்பாளர் நிதீஷ்குமார், தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் தமிழாதன், திருச்சி கரூர் மண்டல செயளாலர், ஒன்றிய பொறுப்பாளர்கள் புகழேந்தி, ரமேஷ். கோபி மற்றும் நீலவான், திருச்சி மேற்கு மாவட்டம் விடுதலை இன்பம், மாநில துணைச் செயலாளர் மதன்ராஜ், மாநில துணை பொறுப்பாளர் செண்பகம் தமிழன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஏகலைவன், மண்ணை தொகுதி செயலாளர் சங்கர், மண்ணை தொகுதி துணை செயலாளர் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision