அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் மருத்துவராக வாய்ப்பளித்த எடப்பாடியாருக்கு மீண்டும் முதல்வராக வாக்களியுங்கள் - கு.ப கிருஷணன் பரப்புரை
திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டத்தில் ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைக்குட்பட்ட சித்தாநத்தம், சமுத்திரம், கண்ணுடையான்பட்டி, கலிங்கப்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த 50 கிராமங்களில், முன்னாள் அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான கு.ப.கிருஷ்ணன், அதிமுக மணப்பாறை வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.செல்வராஜ் தலைமையில் தனது தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். தேர்தல் பரப்புரைக்கு சென்ற கு.ப.கிருஷ்ணனுக்கு, கிராமங்கள் தோறும் தாரைத்தப்பட்டைகளுடன் தெருக்கூத்து கலைஞர்களின் நடனம், செண்டை மேளம், பட்டாசு, வான வேடிக்கை, கும்ப ஆரத்தி என உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கத்திக்காரன்பட்டியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர், அங்கிருந்த அரசு மாணவியர்களிடம் “எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் அரசு, நீட் தேர்வு இல்லாமல் ஏழரை சதவீத இட ஒதுக்கீட்டில் நீங்கள் மருத்துவராகும் கனவை நினைவாக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளது தெரியுமா” என உருக்கமாக கலந்துரையாடல் செய்தார்.அரசு பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்கள் மருத்துவராக வாய்ப்பளித்த எடப்பாடியாருக்கு மீண்டும் முதல்வராக வாக்களியுங்கள் என பரப்புரையில் ஈடுபட்டார்.
அதனைத்தொடர்ந்து சமுத்திரம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர், தலையில் பச்சைத்துண்டை கட்டிக்கிட்டு கரும்பு காட்டில் சிமெண்ட் ரோடு போட்டு நடக்குற ஆள் இல்லை நானும் எடப்பாடியாரும். அம்மா ஆட்சியில் ஒரு தரம், இப்போ எடப்பாடியார் ஆட்சியிலும் விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யதுள்ளனர் என கூறி அதிமுக அரசின் விவசாய கடன்கள் தள்ளுபடி குறித்தும், பெண்களுக்கான தேர்தல் அறிக்கைகள் குறித்தும் பட்டியலிட்டு வாக்கு சேகரித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
நிகழ்வில் அதிமுக, பாஜக, தமாக நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.