முன்னாள் ராணுவ வீரர்கள் ,நாட்டு நலத்திட்ட பணி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த திருச்சி மாநகர காவல் துறை:

முன்னாள் ராணுவ வீரர்கள் ,நாட்டு நலத்திட்ட பணி மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த திருச்சி மாநகர காவல் துறை:

சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்காக காவலர்களோடு இணைந்து செயல்பட   முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் நாட்டு நலத்திட்ட பணி மாணவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது திருச்சி மாநகர காவல்துறை.


 பல ஆண்டுகாலம் நம் நாட்டிற்காக தேசத்தின் பல்வேறு இடங்களில் பணிசெய்து பெருமையுடன் திகழும் முன்னாள் ராணுவ வீரர்கள் தங்களுடைய சேவையை மீண்டும் செய்வதற்கான ஒரு வாய்ப்பாக தேர்தல் பணியை ஏற்றுக் கொண்டு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
  தங்களுடைய பணியை சிறப்பாக செய்து மாநகர காவல்துறையினருக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது .
தேர்தல் பணி செய்வதற்கு தகுந்த ஊதியம் வழங்குவதுடன் மேலும் அவர்கள் தேர்தல் தபால் வாக்கு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்து தரப்படும்.

                 Advertisement


  நாட்டுநலப்பணி திட்ட மாணவர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் கலந்து கொண்டு தேர்தலை  பாதுகாப்பாகவும் அமைதியான முறையிலும் நடத்திட உதவிட வேண்டும்  .முன்னாள் ராணுவ விருப்பமுள்ள முன்னாள் ராணுவ வீரர்களும் நாட்டு நலத்திட்ட பணி மாணவர்களும் திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை 0431- 2333 577  அல்லது 9626273399 என்ற எண்ணிற்கு  தொடர்பு கொள்ளுமாறு திருச்சி மாநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW