சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டிகள் - மாவட்ட ஆட்சியர் தகவல்

சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டிகள் - மாவட்ட ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் கிராம புறங்களில் வாழும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிப் பெண்கள் பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோர் போதிய ஊட்டச்சத்து வழிப்புணர்வு இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர்.

குறிப்பாக இரத்தசோகையினால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் மூலம் உணவு. ஊட்டச்சத்து, உடல் நலம், தன்சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் (FNHW) திட்டத்தின் மூலம் "இரத்தசோகை இல்லாத கிராமம்" குறித்து சிறப்பு பிரச்சாரம் மற்றும் சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழா

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களிலும் வட்டார அளவிலான ஊட்டசத்து விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் 404 கிராம ஊராட்சிகளிலும் கிராம ஊரட்சிகள் அளவிலான ஊட்டசத்து விழிப்புணர்வு போட்டிகள் கீழ்க்காணும் விவரப்படி நடைபெறவுள்ளது.

சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழா போட்டிகள் விவரம்:-

எனவே மேற்காணும் விவரப்படி நடைபெறவுள்ள போட்டிகளில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று இரத்தசோகை /ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குடும்பங்கள் மற்றும் கிராமங்களை உருவாக்கவும் மற்றும் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட உறுதுணையாக இருக்க வேண்டும்.

மேலும் வட்டார அளவிலான போட்டியில் முதல் பரிசு பெறும் உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட அளவில் போட்டி நடத்தப்படும் எனவும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision