திருச்சிக்கு விரைவில் மெட்ரோ ரயில் திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சிக்கு விரைவில் மெட்ரோ ரயில் திட்டம் - அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி தில்லைநகர் மக்கள் மன்றத்தில் 75 ஆவது சுதந்திர தின விழா சுதந்திரத்திருநாள் அமுதப் பெருவிழாயொட்டி சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணி விளக்கக் கண்காட்சியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்து ரூபாய் ஒரு கோடியே 70 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என் நேரு... அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தமிழக முதல்வரின் துபாய் பயணம் குறித்த கருத்துக்கு பதில் அளித்த அமைச்சர் கே.என் நேரு ஜெயக்குமார் ஆண்டவனுக்கு தெரிந்து தான் திருச்சிக்கு கையெழுத்திட வந்துள்ளார். முதலீட்டாளர்களை கொண்டு வர, தமிழகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காக,சிறந்த மாநிலமாக மாற்ற தமிழக முதல்வர் துபாய் சென்றுள்ளார். அண்ணாமலை எங்கள் மீது குற்றச்சாட்டு கூறவில்லை என்றால் அவரால் கட்சி நடத்த முடியாது. அண்ணாமலை மட்டுமல்ல யார் விமர்சனம் கூறினாலும் மக்கள் திமுக பக்கம் உள்ளனர்.

திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கான விரிவான திட்ட இறுதி வடிவம் தயாரிக்கப்பட்டுள்ளது - ஒரு வார காலத்திற்குள்ளாகவே டெண்டர் பணிக்கு வந்து விடும். திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தினருக்கு ஏற்கனவே மண் பரிசோதனை செய்து  அந்த இடத்தில் கட்டடங்களை கட்டலாம் எனவும் அறிக்கை கொடுத்துள்ளனர்.

ரூ 2.80 லட்சம் கொடுத்து ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை பணிகள் நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைக்கும் பணி, காவிரி ஆற்றிலிருந்து நேரடியாக ஜங்ஷன் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கும் திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய காவிரி பாலம் கட்டுவதற்கு ஏற்கனவே 90 கோடி என்று நினைக்கப்பட்ட நிலையில் தற்போது 130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சி விரிவுபடுத்த கூடிய காரணத்தினால் புதிய கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். திருச்சியில் உள்ள ஆன்மீக தலங்களான மலைக்கோட்டை - வயலூர் - ஸ்ரீரங்கம் - சமயபுரம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வருவதற்கு முதல்வரிடம் எடுத்துக்கூற உள்ளோம். பால் விலை, பஸ் கட்டணம் உள்ளிட்டவைகளை உயரும் திமுகவினர் மக்களுக்கு பரிசு கொடுக்க காத்து இருக்கிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்துக்கு பதிலளித்த கே என் நேரு... அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏற்ற வில்லையா.

ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருளாதார ரீதியாக ஏற்றம் வரும்பொழுது மக்கள் அதை சந்திக்கத்தான் வேண்டும் வேண்டுமென்றே திணிப்பது அல்ல  அரசு ஊழியர்கள் சம்பளம் அதிகம் கேட்கிறார்கள் எவ்வளவுதான் மானியம் கொடுப்பது இயலாத ஒன்று அதில் சிறிதளவு மாற்றம் வரும் அதை முதல்வர் முடிவு எடுப்பார் என்றார். முன்னதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே .என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்காட்சியை பார்வையிட்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO