மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

இன்று (14.12.2023)-ந்தேதி திருச்சி மாநகரம், காவல் ஆணையகரகத்தில் நவம்பர் -2023 மாதத்திற்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் S.செல்வகுமார், (தெற்கு), V.அன்பு, (வடக்கு), S.ரவிசந்திரன், (தலைமையிடம்), காவல் கூடுதல் துணை ஆணையர்(ஆயுதப்படை), காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் அவர்கள் பேசுகையில்.... திருச்சி மாநகரில் உள்ள 50 காவலர் பூத்களை (POLICE BOOTH) சுத்தமாக பராமரிக்க வேண்டும் எனவும், எந்தநேரத்திலும் சோதனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்தும், விபத்து மற்றும் விபத்தினால் ஏற்படும் மரண வழக்குகள் பற்றியும் ஆய்வு செய்தும், விபத்து வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார். அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்தும், போதை மற்றும் புகையிலை பொருள்கள் விற்பனை ஏதும் நடைபெறா வண்ணம் தீவிரமாக கண்காணிப்பு செய்தும், சரித்திரபதிவேடு குற்றவாளிகள் மற்றும் கெட்ட நடத்தைக்காரர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவும்,

திருச்சி மாநகரம் முழுவதும் பொருந்தப்பட்டுள்ள சுமார் CCTV கேமராக்களை முறையாக பாரமரிக்க வேண்டும் எனவும், மேலும் பழுதான CCTV கேமராக்களை பழுதுபார்த்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் காவல் நிலையங்களில் பதிவாகி உள்ள திருட்டு வழக்குளை துரிதமாக புலன்விசாரணை செய்து, எதிரிகளை கைது, வழக்கு சொத்துக்களை மீட்க வேண்டும்.மேலும் முதல்வரின் முகவரியில் பெறப்பட்ட புகார்கள், காவல்துறை இயக்குநர் அலுவலகபுகார் மனுக்கள் மற்றும் காவல்நிலையத்திற்கு நேரடியாக புகார் அளிக்கவரும்பொதுமக்களிடம் கணிவாக நடந்து கொண்டும், அவர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள்மீது காலம் தாழ்த்தாமல் முறையாக விசாரணை செய்தும், வழக்கு பதிவு செய்ய முகாத்திரம்இருந்தால் வழக்கு பதிவு செய்யவும், இல்லையேல் புகார் மனுவிற்கு மனு ரசீது வழங்கிவிசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகளுக்குஅறிவுறுத்தினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய....

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision