ஆடு சந்தையில் ரூ 40 லட்சம் மட்டுமே வர்த்தகம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள ஆடு சந்தை பிரசித்திபெற்றதாகும். வாரந்தோறும் புதன் கிழமை காலை 5.00 மணி முதல் காலை 10.00 வரை நடைபெறும் சந்தையில் தஞ்சாவூர் புதுக்கோட்டை, சிவகங்கை, தேனி, ஈரோடு, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநில வியாபாரிகளும் வந்து ஆடுகளை வாங்கிச் செல்கின்றனர்.
வாரந்தோறும் சந்தைக்கு 5000 ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் வாரந்தோறும் சந்தையில் 1கோடி ரூபாய்க்கு மேல் பொருளாதார பரிமாற்றம் நடக்கும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆடு வரத்து குறைவால் ரம்ஜான் பண்டிகையொட்டி நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.40 லட்சம் அளவிலான வர்த்தகம் மட்டுமே நடைபெற்றது.
இதே போல ஆடுகளுக்கும் உரிய விலை கிடைக்காததால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். ரம்ஜான் பண்டிகையொட்டி நடைபெறும் வார சந்தையில் எப்போதும் இறைச்சிக்காக ஆடுகள் அதிக அளவில் விற்பனை ஆகும். ஆனால் இந்த ஆண்டு இறைச்சி ஆடுகள் கூட விற்பனை மந்தமானதால் ஆடுகள் வளர்ப்பு தொழில் செய்து பிழைக்கும் விவசாயிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வாரந்தோறும் நடைபெறும் ஆட்டுச் சந்தையில் ரூ 1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்ற நிலையில், இந்த வாரம் ஆட்டுகள் வியாபாரிகள் வரத்து குறைவால் மந்தமான ரூ 40 லட்சம் அளவிலான வர்த்தகம் மட்டுமே நடைபெற்றது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn