உடல் உறுப்பு தானம் - திருச்சியில் மெகா மாரத்தான் ஓட்டம்

உடல் உறுப்பு தானம் - திருச்சியில் மெகா மாரத்தான் ஓட்டம்

மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகள் பற்றாக்குறையால் இந்தியா போராடி வருகிறது. ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறுதி நிலை உறுப்பு செயலிழப்பால் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டுதோறும் சுமார் 3,500 மாற்று அறுவை சிகிச்சைகள் மட்டுமே செய்யப்படுகின்றன. 

ஒவ்வொரு நாளும் குறைந்தது 15 நோயாளிகள் உடல் உறுப்புகளுக்காகக் காத்திருக்கிறார்கள். மேலும் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு புதிய பெயர் இந்த காத்திருப்பு பட்டியலில் சேர்க்கப்படுகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாததால், உடல் உறுப்பு தான விழிப்புணர்வு திருச்சியில் காவேரி மருத்துவமனை மற்றும் தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து மூன்று பிரிவுகளாக மெகா மாரத்தான் ஓட்டம் இன்று நடத்தினர். இதில் 21 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டம் சமயபுரம் கூத்துர் அருகில் இருந்து தொடங்கியது. இதனை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து 10 கி.மீ மாரத்தான் ஓட்டத்தை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கொடியசைத்து தொடங்கி வைத்தார் இந்த மாரத்தான் ஓட்டமானது தென்னூர் அண்ணா நகரில் இருந்து தொடங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, மன்னார்புரம் வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நிறைவடைகிறது.

அதேபோன்று ஐந்து கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டமானது தென்னூர் அண்ணா நகரில் இருந்து தொடங்கி அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் நிறைவு பெறுகிறது. 5 கிமீ மாரத்தான் தொடர் ஓட்டத்தினை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை 8 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விழிப்புணர்வு மாரத்தான் ஓடி வெற்றி பெற்றவர்களுக்கு மூன்று பிரிவுகளில் முதல் மூன்று இடம் வரும் நபர்களுக்கு ஐந்து லட்சம் மதிப்பிலான பல்வேறு பரிசுகளை நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் பங்கேற்று வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision