உணவுப்பொருட்கள் கடத்தல் - கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு
தமிழ்நாடு உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் உத்தரவின்படி அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா அறிவுரையின்பேரில், திருச்சி மாவட்டத்தில் உணவு பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண் 18005995950 அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய இடங்களான பேருந்து நிலையம், சுங்கச்சாவடி, ரெயில் நிலையம் ஆகிய இடங்களில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் சுவரொட்டியை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision