அளவுக்கு அதிகமாக ஏற்றி வந்த ஏழு ஆட்டோக்களுக்கு அபராதம்

அளவுக்கு அதிகமாக ஏற்றி வந்த ஏழு ஆட்டோக்களுக்கு   அபராதம்

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கணேசபுரம் பகுதியில் பள்ளி குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஏற்றி வந்த ஏழு ஆட்டோக்களுக்கு திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் அபராதம் விதித்தார்.

திருவெறும்பூர் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் பெல் கணேசபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொழுது பெல் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி வந்த ஏழு ஆட்டோக்களுக்கு தலா 1500 வீதம் அபராதம் விதித்தார்.

இதற்கு ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்ததோடு தங்களது வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படுவதாகவும், அடிக்கடி இது போல் நீங்கள் அபராதம் விதிப்பது எங்களுக்கு பெரும் சுமையாக உள்ளது.

மேலும் பெல் ஊரக பகுதியில் பலர் ஹெல்மெட் இல்லாமலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும், முறையாக லைசன்ஸ் பெறாமலும் வாகனங்களை ஓட்டி வருவதாகவும், இதனால் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் அவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு போடுங்கள் அதை விட்டு எங்களுக்கு மட்டும் அபராதம் விதிப்பதால் நாங்கள் என்ன செய்ய முடியும் என கூறி புலம்பியுள்ளனர்.

இது சம்பந்தமாக பேசி முடிவு செய்யலாம் என செந்தில்குமார் ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அவர்கள் கலைந்து சென்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn