மாற்றுத்திறனாளிகள் திருமண நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் - திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் திருமண நிதி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் - திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கை, கால் பாதிக்கப்பட்டோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவித் திட்டம், பார்வையற்றோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவித் திட்டம், காது கேளாத மற்றும் வாய்பேசாதோரை நல்ல நிலையில் உள்ளோர் திருமணம் புரியும் திருமண நிதியுதவித் திட்டம். மாற்றுத்திறனாளியை மாற்றுத்திறனாளி திருமணம் புரியும் திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிதியுதவி மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருமணம் புரிந்த மாற்றுத்திறனாளிகளுக்கு 
ரூ.25000 மற்றும் 8 கிராம் தங்க நாணயமும், தம்பதியரின் எவரேனும் ஒருவர் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு படித்தவராக இருந்தால் ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திருமண தம்பதியர்களில் இருவருக்கும் முதல் திருமணமாக இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் திருமணம் நடைபெற்று ஓராண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 
மேலும் திருமண அழைப்பிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், கல்விச் சான்றின் நகல் மற்றும் தம்பதியர் இருவருக்கும் இதுவே முதல் திருமணம் என்பதற்கான சான்று (கிராம நிர்வாக அலுவலரிடம் பெற வேண்டும்) ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம், அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில்

நேரிலோ அல்லது அலுவலகத் தொலைபேசி எண் 0431-2412590 மூலம் தொடர்பு கொண்டு திருமண நிதியுதவி மற்றும் தங்க நாணயம் பெறும் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn