ரெயில்வே அதிரடி... புதிய விதிகளை மீறினால் ஆயிரம் ரூபாய் அபராதம்.

ரெயில்வே அதிரடி... புதிய விதிகளை மீறினால் ஆயிரம் ரூபாய் அபராதம்.

இந்திய ரயில்வே பயணிகளுக்காக பல புதிய வசதிகளையும் பல புதிய விதிகளையும் அவ்வப்பொழுது கொண்டு வருகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணிக்கின்றனர். ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் வாங்குவது அவசியம். நீங்கள் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றாலும் இந்திய ரயில்வேயின் சில முக்கியமான விதிகளை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை இனி இந்த விதிகளை நீங்கள் பின்பற்றவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்,

ரயில்வே விதிகளின்படி ஒருவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அதிகபட்சமாக ரூபாய் 1000 அல்லது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். அபராதம் குறைந்தபட்சம் ரூபாய் 250 ஆக கூட இருக்கலாம். ஒரு பயணி வேறு ஏதேனும் ஒரு கோச்சின் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு பயணித்தால். பின்னர் டிக்கெட்டுகளுக்கு இடையேயான வித்தியாசம் வசூலிக்கப்படுகிறது. இதிலும் கூடுதல் கட்டணம் TTEல் விதிக்கப்படலாம். ஒரு பயணி ஸ்லீப்பர் கோச் டிக்கெட்டை எடுத்துக்கொண்டு ஏசி கோச்சில் பயணம் செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். எனவே இரண்டு டிக்கெட்டுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தை செலுத்த வேண்டும்.

ஒருவர் மது அருந்திவிட்டு ரயிலில் பயணம் செய்தால், அவரிடமிருந்து ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும். அவரும் ரயிலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார். குடிபோதையில் பயணம் செய்பவருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம். ஒருவர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணத்தின் போது அடையாள அட்டையை எடுத்துச் செல்லவில்லை என்றால், பயணச்சீட்டு இல்லாத பயணியை TTE பரிசீலித்து அபராதம் விதிக்கலாம்.

அபாய நேரத்திற்காக வழங்கப்பட்ட ரயிலின் சங்கிலியை காரணமின்றி இழுத்தால், அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார். அவருக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை அல்லது ரூபாய் 1,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம். புகை நமக்கு மட்டுமல்ல உடன் பயணிப்பவர்களுக்கும் ரயிலுக்கும் பகைதான் ரயிலில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், யாராவது புகைபிடித்தால், 200 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.

இவற்றை கடைப்பிடித்தால் உங்கள் பயணம் இனிதாகும் !

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision