ஸ்ரீரங்கம் அடிமனை உரிமை விவகாரம் - உச்சநீதிமன்றம் தடை

ஸ்ரீரங்கம் அடிமனை உரிமை விவகாரம் - உச்சநீதிமன்றம் தடை

108 வைணவ திருதலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில். இக்கோயில் அமைந்துள்ள வெள்ளித்திருமுத்தம் கிராமத்தில் அடங்கிய ஏறத்தாழ 800 ஏக்கர் நிலப்பரப்பு கோயிலுக்குச் சொந்தமானது என கூறப்படுகிறது.

இதனால் இங்கு குடியிருந்து வரும் மக்கள் தங்களது சொத்தை விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியாத நிலையில் பெரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். சட்டமன்றத் தேர்தல் வரும் பொழுது ஒவ்வொரு கட்சியினரும் இந்த அடிமனை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளிக்கின்றனர். ஆனால் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை.

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் 5, 6, 7ம் பிரகாரத்திற்கு உட்பட்ட வெள்ளிதிருமுத்தம் கிராமத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு உத்திரவீதி மற்றும் சித்திரவீதிகள், சாத்தார வீதி, அடைய வளஞ்சான் வீதி, வ. உ.சி தெரு உள்ளிட்ட சுமார் 10,000 வீடுகள் அடுக்குமாடி வணிக வளாகங்கள், கடைகள், காலி மனைகள் உள்ளிட்டு 326 ஏக்கர் அடிமனை முழுவதும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு பாத்தியப்பட்டது எனக் கூறிசென்ற மார்ச் மாதம் மதுரை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டது.

இதனை தொடர்ந்து திருச்சி ஸ்ரீரங்கம் அடிமனை உரிமை மீட்பு குழுவினால் டில்லி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு மனுவை ஏற்றுக்கொண்டு மதுரை உயர்நீதிமன்ற ஆணைக்கு தடை விதித்து எதிர்தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்திரவிட்டுள்ளது.

இந்த குழுவின் சார்பாக செயல் தலைவர் ரகு மற்றும் வழக்கறிஞர் பிரபாகர், ரகுவரன், டில்லி மூத்த வழக்கறிஞர்களுடன் இணைந்து இந்த உச்சநீதிமன்ற தடையாணை பெற்றுள்ளார்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision