திருச்சியில் 20-ந் தேதி கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தேர்வு

திருச்சியில் 20-ந் தேதி கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 13 முதல் 24 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான மாநில அளவில் பயிற்சி முகாமை நடத்துகிறது.

இந்த முகாமில் பங்கேற்க தகுதியுள்ள திறமை வாய்ந்த திருச்சி மாவட்ட கிரிக்கெட் வீராங்கனைகள் தேர்வு பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் என்ஜினீயரிங் கல்லூரியில் 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.

தேர்வில் கலந்து கொள்ளும் வீராங்கனைகள் காலை 6:30 மணிக்குள் வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்து தேர்வு மைதானத் துக்கு வர வேண்டும். தேர்வுக்கு வருபவர்கள் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை கொண்டு வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், தகவல்களுக்கு 7010757073 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச்செயலாளர் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn