வெயில் தாக்கம் - பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை

வெயில் தாக்கம் - பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை

மோக்கா புயல் காரணமாக திருச்சியில் கலந்து சில வாரங்களாக மழை பெய்து குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை இருந்து வந்தது. இந்த நிலையில் புயல் கரையை கடந்த நிலையில், நான்கு நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. திருச்சி பொறுத்தவரை அக்னி நட்சத்திரம் துவங்கி இம்மாத நான்காம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மழை பெய்தது அதனால் அக்கினியின் கோரத்தாண்டவத்திலிருந்து மக்கள் விடுபட்டு நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில் திருச்சியில் நான்கு நாட்களுக்கு மேலாக வாடி வைத்து வரும் வெயில் 102 டிகிரி பாராகெட் அளவு உச்சத்தில் உள்ளது. மேலும் அனல் காற்று வீசு வருவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக முதியோர்கள், கர்ப்பிணிகள், சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அதிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் தப்பிக்க உடலில் நீர் சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அவசியமாக பணிகளுக்கு மட்டும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது குடிநீர் கையுடன் எடுத்து செல்ல வேண்டும்.

ஓ ஆர் எஸ், எலுமிச்சை ஜூஸ், இளநீர் மற்றும் பழச்சாறுகள் அருந்த வேண்டும். இந்த பருவ காலத்தில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், வீட்டில் சமைத்த உணவை உண்ண வேண்டும். நல்ல காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருக்கவும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகள் அணியவும், வெளியே செல்லும்போது காலணி அணிந்தும், குடையுடனும் செல்லவும்.

உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும்போது உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும் குழந்தைகள் முதியவர்கள் கர்ப்பிணிகள் மாலை வேளையில் (12 மணி முதல் 3 மணி வரை) வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn