லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை போலீசார் பங்கீட்டு கொண்டதாக பிரபல கொள்ளையன் திருவாரூர் சுரேஷ் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு:
திருச்சி லலிதா ஜூவல்லரி கொள்ளையில் திருவாரூரில் வாகன சோதனையின் போது 5.700 கிலோ தங்க நகைகள் பறிமுதல். ஒரு கிலோ தங்க நகை திருவாரூர் போலீசார் மறைத்து விட்டனர் – தன்னிடம் பறிமுதல் செய்த நகையை போலீசாரே பங்கீட்டு கொண்டதாக பிரபல கொள்ளையன் திருவாரூர் சுரேஷ் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு.
கடந்த அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க வைர நகைகள் கொள்ளை போனது. இந்த வழக்கில் தொடர்புடைய திருவாரூரைச் சேர்ந்த முருகன், சுரேஷ், மணிகண்டன், கனகவல்லி, கணேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி திருச்சி சமயபுரம் டோல்கேட் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 475 சவரன் தங்க நகைகள் மற்றும் 19 லட்சம் ரூபாய் கொள்ளை போனது இந்த கொள்கையிலும் முருகன் தலைமையிலான கும்பல் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ரிதன் என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து 40 பவுன் நகை மற்றும் பல லட்ச ரூபாய் கொள்ளையடித்த வழக்கு உள்ளிட்ட 11 வழக்குகள் முருகன் சுரேஷ் ஆகியோர் மீது எடமலைப்பட்டிபுதூர் போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேஷ் இன்று காலை திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 2 நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் வரும் 16.12.2019 வரை சுரேஷை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி திரிவேணி உத்தரவிட்டார். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த சுரேஷ் செய்தியாளர்களிடம் பேசிய போது…திருச்சி லலிதா ஜுவல்லரியில் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை முருகன், மணிகண்டன், கணேசனுடன் தானும் பிரித்துக் கொண்டதாகவும், மணிகண்டன் தனது பங்காக 5.7 கிலோ தங்கத்தை கொண்டு செல்லும் போது திருவாரூர் சோதனைச் சாவடியில் போலீசாரிடம் சிக்கியதால் மணிகண்டனிடமிருந்து 5.7 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த போலீசார் அதில் 4.7 கிலோ தங்கத்தை மட்டும் கணக்கில் கட்டிவிட்டு ஒரு கிலோ தங்கத்தை போலீசாரே அமுக்கி விட்டதாக கூறினான்.
மேலும் தாங்கள் ஈடுபடாத கொள்ளை வழக்குகளிலும் தங்களை தொடர்புபடுத்தி போலீசார் அச்சுறுத்துவதாக தாங்கள் கொள்ளையடித்த நகையை விட அதிகமாக நகையை கேட்பதாகவும் கூறினான். மேலும் தன் மீது 16 வழக்குகள் போட்டு உள்ளனர். அதில் 6 வழக்கில் மட்டுமே நான் சம்பந்தப்பட்டுள்ள மீதமுள்ள 10 வழக்குகள் பொய் வழக்காக என்மீது போட்டுள்ளனர். ஒரு கிலோ தங்க நகை போலீசாரிடம் சிக்கியது குறித்து சுரேஷ் சொன்னதால் பெரும் பரபரப்புடன் ஏற்பட்டது.