மலேசியாவில் இருந்து ராட்சத அணில்களை கடத்திய மூவர் கைது

மலேசியாவில் இருந்து ராட்சத அணில்களை கடத்திய மூவர் கைது

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த (29.09.2023) அன்று மலையன் ராட்சத அணில்கள் இரண்டை கடத்தி வந்த மலேசியாவைச் சேர்ந்த எதிரி விஜயகுமாரி என்பவரையும் அணில்களையும் திருச்சி விமான நிலைய சுங்க இலாக அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுப்பதற்காக திருச்சி வனச்சரக அலுவலர் வசம் ஒப்படைத்தார்கள்

திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் s.சதீஷ் வழிகாட்டுதலின்படியும், திருச்சி மாவட்ட வன அலுவலர் G கிரண் உத்தரவுபடியும் திருச்சி வனச் சரக அலுவலர் கோபிநாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை உயிரினமான மலேசியன் ராட்சத அனில்கள் கடத்தலை முற்றாக வேரறுக்கவும் கடத்தலில் ஈடுபட்டவர்களை பிடிக்கவும் தனிக்குழு சிறப்பாக செயல்பட்டது.

துரித நடவடிக்கை எடுத்தது எதிரியிடம் துருவித் துருவி விசாரித்து தீவிர புலன் விசாரணை செய்து 24 மணி நேரத்துக்குள் இந்த அணில்களை பெற வந்த சென்னை சூளைமேட்டை சேர்ந்த எதிரி 2 சுல்தான் இப்ராஹிம் சுமார் (29) மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக  இருந்த எதிரி 3 கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை சேர்ந்த சாகுல் அமீது சுமார் (28) ஆகியோரையும் அதிரடியாக கைது செய்தது. 

பின்னர் எதிரிகளிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெற்று இந்திய வன உயிரின பாதுகாப்பு  சட்டம் 1972 பிரிவு 2 உட்பிரிவு 1 ன் படி அணில் வன உயிரினமாகும். பிரிவு 2 உட்பிரிவு 16 ன் படி அணில்கள் அட்டவணை 1 பாலூட்டி வகை வரிசை எண் 150 இல் வகைப்படுத்தப்பட்டுள்ளது. பிரிவு 39 (1 ) (a) ன்படி வன உயிரினம் அரசின் சொத்தாகும். பிரிவு 44 ன் படி வன உயிரினங்களை வைத்திருக்க எடுத்து செல்ல தடை .பிரிவு 49 ன் படி அட்டவணை விலங்குகளை வைத்திருத்தல் தடை பிரிவு50 ன் படி தொட்டு உணர்த்தி கைது செய்யப்பட்டும் பிரிவு 51 ன் படி ஏழு ஆண்டுகள் கடும்  சிறை தண்டனை விதிக்க கூடிய ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாகும் 

இந்த பிரிவுகளில் கீழ் வன உயிரின குற்ற வழக்கு எண் 25 /2023 பதிவு செய்யப்பட்டது பின்னர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் VI திருச்சி  முன்பு ஆஜர்படுத்தி எதிரிகளுக்கு ரிமாண்ட் உத்தரவு பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த தனிப்பட்டையில் வனவர்கள் பாலசுப்பிரமணியன் துளசி மலை வனக்காப்பாளர்கள் ராஜ்குமார் சரவணன் மற்றும் வன காவலர்கள் சுகன்யா வேலாயுதம் செல்லதுரை ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.  அணில்கள் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை கிண்டி தேசிய பூங்காவில் இயங்கி வரும் வனவிலங்கு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision