புதிய தொழில் முனைவோர் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு புது முயற்சியை தொடங்கிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்

புதிய தொழில் முனைவோர் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான ஒரு புது முயற்சியை தொடங்கிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம்

இன்றைக்கு பலருக்கும் தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது அதற்கான பல நல்ல திட்டங்களும்  இருக்கின்றன ஆனால் அது எவ்வாறு ஆரம்பிப்பது அதற்கான முதலீடு எவ்வாறு செய்வது என்ற தயக்கத்தில் பலர்  இருக்கின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் திட்ட துறையை சேர்ந்தவர்கள் ஒரு புது முயற்சியை தொடங்கியுள்ளனர். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர்.எம்.செல்வம் கூறுகையில், பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோர், புதுமை மற்றும் தொழில் மையம் (BECH) ஜூலை 2019 முதல் RUSA- கட்டம் 2.0 இன் கீழ் நிறுவப்பட்டது.  

மத்திய அரசானது, பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் உள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேர்வாகியுள்ளது. BECH இன் முக்கிய நோக்கம் கல்விப் பாடத்திட்டத்தில் புதுமையான தொழில் முனைவோர் இயக்கவியலின் இயக்கவியல் மற்றும் உயர் கல்வி மட்டத்தில் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதாகும். முக்கியமாக, இந்தத் திட்டம் மாணவர்களை, முக்கிய பங்குதாரர்களான, அவர்களின் எதிர்கால வாழ்க்கையை தொழில்முறையுடன் வரைபடமாக்கத் திட்டமிட்டுள்ளது.  மாணவர்களிடையே உள்ளார்ந்த தொழில் முனைவோர் திறன்களை வளர்ப்பது மற்றும் வளர்ப்பது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

இத்திட்டம் குறித்து பதிவாளர் கோபிநாத் பேசுகையில்...மாணவர்கள் தங்கள் படைப்பாற்றல், அசல் தன்மை, புதிய யோசனைகள், தொழில்முனைவோர் மற்றும் திட்டங்களை வெளிப்படுத்தவும், தொழில்முறை பயிற்சி பெறவும், சரியான வழிகாட்டுதலுடன் அவற்றை செயல்படுத்தவும் ஒரு அறிவியல் தளத்தை வழங்க BECH முன்மொழிகிறது. இத்திட்டமானது மாணவர்களுக்கு மட்டுமின்றி புதிய தொழில் தொடங்கும் அனைவருக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் அல்லது ஏற்கனவே தொழில் துறையில் இருந்து கொண்டு வேறு ஒரு புதிய திட்டத்தை தொடங்க நினைப்பவர்களுக்கு வழி காட்டுவதற்கும் முதலீடு வழங்குவதற்கும் இந்த திட்டம் உதவியாக இருக்கும்
என்றார்.

திட்ட அதிகாரியான டாக்டர்.பிரேம் ஆனந்த் கூறுகையில்... முதலில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ல் கேட்கப்பட்டுள்ள தகவல்களினை பூர்த்தி செய்வதன் மூலம் பயணாளர்களின் திட்டங்கள் தெளிவாக இருக்கும் பட்சத்தில் அது பொருளாதார வகையில் மக்களுக்கு உதவும் வகையில் இருக்குமாயின் அதனை பரிசீலனை செய்யப்படும். அதனை தொடர்ந்து அத்திட்டத்திற்கு உரியவர்களை நேரடியாக அழைத்து திட்டம் குறித்த தகவல்களையும் அதை எவ்வாறு மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று அனைத்து கட்டத்திலும், அவர்களுக்கு உறுதுணையாக செயல்படுவதற்கான ஓர் சிறந்த வாய்ப்பாக இது அமையும். பாரதிதாசன் பல்கலைக்கழகம் மத்திய அரசின் ரூசா 2.0
RUSA (ராஷ்ட்ரிய உச்சத்தர் சிக்ஷா அபியான்) தற்போதைய திட்ட காலத்தில், பாரதிதாசன் பல்கலைக்கழகம் 20 மாநில பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 

திட்ட இயக்குநர் டாக்டர்.பிரச்சன்னா கூறியதாவது..... ஆராய்ச்சி, புதுமை மற்றும் தர மேம்பாடு. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொழில் வாய்ப்புகள், திறன் மேம்பாடு, சேமித்தல் மற்றும் தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்களின் வசதி ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக "தொழில்முனைவு மற்றும் தொழில் மையம்" நிறுவப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் புதியதாக தொழில் தொடங்குபவர்களுக்கு முதலீடு செய்வதற்கு உதவும் வகையில் அது செயல்பட உள்ளது மேலும் இது குறித்த தகவல்கள் வேண்டுமாயின் 9944943240 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு  தகவல்களை தெரிந்து கொள்வதோடு சந்தேகங்களையும் தீர்த்து கொள்ளலாம். சென்னை மாநகர் போன்று திருச்சி மாநகர் இன்னும் பல  தொழில் வளர்ச்சி ஏற்படுவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்குவதற்கான முயற்சி ஆகும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn