அரசு பேருந்து படியில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் திருச்சி பள்ளி மாணவர்கள்
திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்குகின்றன. இந்நிலையில் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு செல்வதற்காக துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதி மாணவர்கள் துறையூரில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து பயணம் செய்வார்கள்.
அதில் ஒரு சிலர் மாணவர்கள் மட்டும் பேருந்தில் செல்லும்போது படிக்கட்டுகளில் நின்று கொண்டு நடந்து செல்பவர்களை எட்டி உதைப்பது மற்றும் இருசக்கர வாகனங்களை கீழே தள்ளுவது அருகில் செல்லும் வாகனங்களை தொடுவது உள்பட பல்வேறு தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று துறையூரில் இருந்து ஓமந்தூர் செல்லும் அரசு பேருந்தில் மாணவர்கள் வழக்கம்போல் பஸ்சின் பின்பக்கத்தில் உள்ள படிக்கட்டுகளில் ஐந்து மாணவர்கள் நின்று கொண்டு பயணம் செய்தார்கள்.
அப்போது பேருந்து துறையூரில் இருந்து ஓமாந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது துறையூர் பெரம்பலூர் சாலையில் பேருந்தும் லாரியும் ஒரே வேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, அருகில் இருந்த லாரியை தொட்டுப் பிடித்தார்கள். இதை பார்த்த லாரி டிரைவர் உடனடியாக லாரியின் வேகத்தை குறைத்தார். அப்போது அரசு பேருந்தும் லாரியும் மிக அருகாமையில் சென்றதால் படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் பயணம் செய்த ஐந்து மாணவர்கள் லாரியின் சக்கரத்தில் சிக்கி உயிர் இழக்கும் அபாய சூழ்நிலை இருந்தது. லாரி டிரைவர் சூழ்நிலையை உணர்ந்து லாரியை மெதுவாக இயக்கியதால் அதிர்ஷ்டவசமாக ஐந்து மாணவர்கள் உயிர் தப்பினர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO