மீண்டும் உக்கிரமான உக்ரைன் ரஷ்யா போர் - பங்குச்சந்தைகளில் பதட்டம்
சர்வதேச சந்தைகளில் காணப்பட்ட பலவீனமான போக்குக்கு மத்தியில் திங்களன்று இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவுடன் முடிவடைந்தன. சென்செக்ஸ் 200.18 புள்ளிகள் சரிந்து 57,991.11 புள்ளிகளில் நிறைவடைந்தது. பகலில், இது 825.61 புள்ளிகள் அல்லது 1.41 சதவீதம் சரிந்து 57,365.68 ஆக இருந்தது.
நிஃப்டி 73.65 புள்ளிகள் அல்லது 0.43 சதவீதம் சரிந்து 17,241 புள்ளிகளில் நிறைவடைந்தது.
வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமையன்று நிகர ரூ.2,250.77 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர் என்று பிஎஸ்இ-யிடம் கிடைத்ததரவுகள் தெரிவிக்கின்றன.
மென்பொருள்துறை பங்குகள் பிஎஸ்இ குறியீடு 255 புள்ளிகள் அதிகரித்து 28,444 ஆக உயர்ந்தது. அதிக நஷ்டம் அடைந்தது நுகர்வோர் பொருட்கள் மற்றும் மூலதன பொருட்கள் பங்குகள் முறையே முன்னணி வகிக்கின்றன.
அவற்றின் குறியீடுகள் முறையே 618 புள்ளிகள் மற்றும் 315 புள்ளிகள் சரிந்தன.
செய்திகளில் உள்ள முக்கிய பங்குகள் : HDFC, HCL Tech, TCS, Suzlon Energy மற்றும் ஜேபி அசோசியேட்ஸ் நேற்று சென்செக்ஸில் அதிக லாபம் மற்றும் நஷ்டம் ஏற்பட்டவர்களின் விவரங்களைப் பார்க்கலாம்.
லாபம் தந்த பங்குகளில் சில :
ஆக்சிஸ் வங்கி: பிஎஸ்இயில் முந்தைய முடிவான ரூ.755.90க்கு எதிராக 2.76 சதவீதம் உயர்ந்து ரூ.776.75-ஆக முடிவடைந்தது. இது 3.03 சதவீதம் உயர்ந்து ரூ 778.8 இன் இன்ட்ராடே அதிகபட்சத்தை எட்டியது. வங்கியின் சந்தை மதிப்பு ரூ.4.31 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
டிசிஎஸ் : பிஎஸ்இயில் முந்தைய முடிவான ரூ.3065க்கு எதிராக ஐடி பங்கு 1.84 சதவீதம் உயர்ந்து ரூ.3121.40 ஆக முடிந்தது. இது ரூ 3129.9 இன் இன்ட்ராடே அதிகபட்சத்தை எட்டியது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.11.42 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஒரு பங்குக்கு 8 ரூபாயை ஈவுத்தொகையாக அறிவித்துள்ளது.
மாருதி : பிஎஸ்இயில் முந்தைய முடிவான ரூ.8782.95க்கு எதிராக 0.94 சதவீதம் உயர்ந்து ரூ.8865.55-ல் முடிவடைந்தது. இது ரூ.8877 ஆக உயர்ந்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2.67 லட்சம் கோடியாக உயர்ந்தது.
விப்ரோ : பிஎஸ்இயில் முந்தைய முடிவான ரூ.408.10க்கு எதிராக 0.77 சதவீதம் உயர்ந்து ரூ.411.25-ஆக முடிவடைந்தது. ரூ.413.40 ஆக உயர்ந்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2.25 லட்சம் கோடியாக உயர்ந்தது.
இன்ஃபோசிஸ் : பிஎஸ்இயில் முந்தைய முடிவான ரூ.1451.75க்கு எதிராக பங்குகளின் விலை 0.75 சதவீதம் உயர்ந்து ரூ.1462.70 ஆக முடிந்தது. இது ரூ.1465 ஆக உயர்ந்தது. ஐடி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6.15 லட்சம் கோடியாக உயர்ந்தது.
நஷ்டமடைந்த பங்குகள் :
ஏசியன் பெயிண்ட்ஸ்: பெயின்ட் தயாரிப்பாளரின் பங்கு பிஎஸ்இயில் முந்தைய முடிவான ரூ.3344.75க்கு எதிராக 1.99 சதவீதம் குறைந்து ரூ.3,278 ஆக முடிந்தது. இந்த பங்கு இன்று பிஎஸ்இயில் 2.53 சதவீதம் சரிந்து ரூ.3,260 ஆக குறைந்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.3.14 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
ஐடிசி : ஐடிசி பங்கு 1.80 சதவீதம் குறைந்து ரூ.327.95 ஆக முடிந்தது. இந்த பங்கு இன்று பிஎஸ்இயில் 2.34 சதவீதம் சரிந்து ரூ.3,26 ஆக குறைந்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4.06 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
டைட்டன் : ஆடம்பர பொருட்கள் நிறுவனத்தின் பங்கு 1.86 சதவீதம் குறைந்து ரூ.2,679.60 ஆக முடிந்தது. இது இன்று பிஎஸ்இயில் 2.34 சதவீதம் சரிந்து ரூ.2,56.75 ஆக குறைந்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.2.37 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் : லார்ஜ் கேப் பங்கு 1.13 சதவீதம் குறைந்து ரூ.2,405-ல் முடிந்தது. இன்று பிஎஸ்இ-யில் ரூ.2,388 ஆக குறைந்த விலையை எட்டியது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.16.27 லட்சம் கோடியாக குறைந்துள்ளது.
எச்டிஎஃப்சி வங்கி : பிஎஸ்இயில் முந்தைய முடிவான ரூ.1,430.70க்கு எதிராக 1.06 சதவீதம் குறைந்து ரூ.1415.50-ல் முடிவடைந்தது. இது ரூ.1398.35 ஆக குறைந்த விலையை எட்டியது. வங்கியின் சந்தை மதிப்பு ரூ.7.88 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. (குழப்பமான சூழ்நிலை தொடர்ந்து நிலவிவருவதால் கைகட்டி நின்று வேடிக்கை மட்டும் பாருங்கள் பாதகம் ஏதும் வராது.)
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO