தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மின் கம்பத்தை தொட்ட விசிக நிர்வாகி பலி

தேசிய நெடுஞ்சாலையிலுள்ள மின் கம்பத்தை தொட்ட விசிக நிர்வாகி பலி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் திலீபன் ரமேஷ் அவர்களின் அக்கா மகனும், விசிக முற்போக்கு மாணவர் அணியின் மாவட்ட அமைப்பாளருமான் வழக்கறிஞர் திருவெறும்பூர் தீனாவின் தம்பியும், விசிக 41வது வார்டு செயலாளருமான் தினேஷ் (31) நேற்று இரவு திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்கும் போது சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு கம்பத்தை தொட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இதுப்பற்றி தகவலறிந்த வந்த உறவினர்கள் மற்றும் விசிக-வினர் சம்பவ இடத்தில் வந்த குவிந்தனர். இதனை தொடர்ந்து திருவெறும்பூர் போலீசார் தினேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பால்பண்ணை முதல் துவாக்குடி வரையில் உள்ள மின்விளக்குகளை முறையாக பராமரிப்பு செய்து மின்கசிவு இல்லை என்பதை உறுதி செய்திட வேண்டும். டோல் கட்டணம் என்ற பெயரால் பல லட்சம் கோடி கொள்ளை அடிக்கும் நிர்வாகம், 

நெடுஞ்சாலைகள் மின் விளக்குகளை பராமரிப்பு பணியை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணமும், குடும்பத்தில் ஓருவருக்கு அரசு பணியும் வழங்கிட தேசிய நெடுஞ்சாலை துறையும், தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு கோரிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே கோரிக்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு திருவரம்பூர் ஆர்டிஓ அருள், திருவெறும்பூர் வட்டாட்சியர் ஜெயபிரகாஷ் ஆகியோர் வருகை தந்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரிடம் மேற்கு மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், வழக்கறிஞர் அணி நிர்வாகி பழனியப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

துவாக்குடி அரசு மருத்துவமனை முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தினேஷ்குமாரின் உறவினர்கள் திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர். திருவெறும்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் மின்சாரம் தாக்கி பலியானதை தொடர்ந்து அதிகாரிகளிடம் உரிய இழப்பீடு கேட்டும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் முடிவு ஏட்டப்படாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் துவாக்குடி அரசு மருத்துவமனை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து திருவெறும்பூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக், திருச்சி கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், திருச்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் தங்கதுரை, மாவட்டச் செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், வழக்கறிஞர் கலைச்செல்வன், நிர்வாகிகள் குணா, நகராட்சி மன்ற உறுப்பினர் ரவிக்குமார் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

திடீர் சாலை மறியல் காரணமாக திருச்சி - தஞ்சை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision