திருச்சியில் சிறுத்தை நடமாட்டமா? - கேமரா பொருத்தி கண்காணிப்பு

திருச்சியில் சிறுத்தை நடமாட்டமா? - கேமரா பொருத்தி கண்காணிப்பு

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொடியாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை அதன் குட்டியோடு நடமாடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

கால் தடத்தை வைத்து பார்க்கும் பொழுது அது சிறுத்தை இல்லை என தெரிய வந்துள்ளதாகவும், எனினும் மர்ம விலங்கு என்ன என்பது குறித்து கண்காணிக்கும் வகையில் விளைநிலங்கள் உள்ள பகுதியில் கேமரா பொருத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள மூன்று முதல் ஐந்து ஏக்கர் உள்ள வாழைத்தோட்டங்களில் வாலை குருத்துகளை சேதப்படுத்தி உள்ளதாகவும்,

விடியற்காலை அந்த விலங்கு நடந்து சென்றதை அப்பகுதியை சேர்ந்த பால் வியாபாரி கண்டதாகவும் வனத்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனை செய்த வனத்துறையினர் அது கரும்பூனை அல்லது மர்ம விலங்காக இருக்க கூடும் என தெரிவித்திருந்தனர். கொடியாலம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பரவிய தகவலால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision