இந்தியாவிலேயே 6வது பெரிய முனையமாக திகழவுள்ள திருச்சி விமான நிலையம் - விமான நிலைய குழும தென் மண்டல நிர்வாக இயக்குனர் பேட்டி!

இந்தியாவிலேயே 6வது பெரிய முனையமாக திகழவுள்ள திருச்சி விமான நிலையம் - விமான நிலைய குழும தென் மண்டல நிர்வாக இயக்குனர் பேட்டி!

திருச்சியின் விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாவது முனையம் இந்தியாவிலேயே ஆறாவது பெரிய முனையம் என்ற பெருமையை பெறவுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணைய குழுமத்தின் தென்மண்டல நிர்வாக இயக்குனர் சஞ்சீவ் சிந்தால் பேட்டி அளித்துள்ளார்.

Advertisement

திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாவது முனையத்தை பார்வையிட்டு கட்டுமான பணிகள் குறித்து விமான நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சஞ்சீவ் சிந்தால் தற்போது இயங்கி வரும் திருச்சி விமான நிலைய முனையத்தைவிட 7 மடங்கு பெரியதாக புதிய முனையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் அப்பணிகள் நிறைவடையும். 

கட்டிடக்கலையிலும், செயல்பாட்டிலும் உலகிலேயே மிகச்சிறந்த விமான நிலையமாக அமையப்போகிறது. மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம், கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் வைத்துக்கொண்டே விமான சேவைகளை இயக்கி வருகிறது. 

Advertisement

புதிதாக கட்டப்படும் முனையத்தில், பாதுகாப்பு முறைமைகள், self check-in மற்றும் பணியாட்கள் தொடாத தானியங்கி வசதிகள் முலம் பயணமூட்டை கையாளுதல் போன்ற முன்னனி சிறந்த வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

 அது மட்டுமல்லாமல், தற்போது உள்ள வசதியை விட 700 மடங்கு அதிகமாக 3.5 மில்லியன் பயணிகள் கையாளும் திறனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே மிக அழகான முனையம் கொண்ட 6வது விமான நிலைய முனையமாக திருச்சி விமான நிலையம் திகழ போகின்றது. முனையத்தின் மேற்கூரை வண்ணமயமாக வடிவமைக்கப்படூகிறது. சர்வதேச விருது பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நம்புகிறேன்.

சென்னை விமான நிலையத்தை ஒப்பிடும்பொழுது திருச்சியில் கார்கோ சேவை அதிகரித்துள்ளது. முதலில் பயணிகள் விமானத்திற்கு தான் முன்னுரிமை இருந்தாலும் கார்கோ விமானங்கள் விரைவில் இயக்கப்படும். அதுமட்டுமல்லாது தென் மாவட்டங்களுக்கு திருச்சி விமான நிலையம் விரைவில் (கார்கோ ஹப்) சரக்கு முனையமாக கண்டிப்பாக செயல்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO