வீட்டில் பணம் எவ்வளவு வைத்திருக்கலாம், அரசு என்ன சொல்கிறது தெரிந்து கொள்ளுங்கள் !!
உலகம் முழுவதும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை எப்பொழுதே வந்துவிட்டாலும் இந்தியாவில் மட்டுமே மோடி வந்தபின்னர் தீவிரப்படுத்தப்பட்டது கணக்கில்லா வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன. கொரோனா காலத்தில் இருந்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் வேகம் கணிசமாக அதிகரித்துள்ளது. இப்பொழுது பெரும்பாலான மக்கள் பரிவர்த்தனைகளை UPI மற்றும் டெபிட்-கிரெடிட் கார்டுகள் மூலம் மட்டுமே செய்கிறார்கள். ஆனாலும் மக்கள் பணமாக பரிவர்த்தனை செய்ய விரும்புகிறார்கள். இதற்காக, மக்கள் ஒரே நேரத்தில் ஏடிஎம்மில் இருந்து அதிகப் பணத்தை எடுக்கிறார்கள், ஆனால் அதிகபட்ச பணத்தை (Cash Limit at Home) வீட்டிலேயே வைத்திருக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா ? இது தெரியாவிட்டால் அறியாமல் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
வீட்டில் பணத்தை வைத்திருப்பதற்கான வருமான வரி விதி என்ன ?
வருமான வரி விதிகளின்படி வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ஆனால், உங்கள் வீட்டில் வைத்திருக்கும் பணம் வருனான வரித்துறையால் அதாவது விசாரணை நிறுவனத்தால் எப்பொழுதாவது பிடிபட்டால், இந்தப்பணத்திற்காண ஆதாரத்தை நீங்கள் காட்ட வேண்டும். நீங்கள் தவறாக பணம் சம்பாதிக்கவில்லை என்றால், நீங்கள் பயப்படத்தேவையில்லை. இதற்கான முழுமையான ஆவணங்கள் உங்களிடம் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் வரிக் கணக்கை தாக்கல் செய்திருந்தால் கவலைப்படத் தேவையே இல்லை.
வீட்டில் வைத்திருக்கும் பணத்தின் ஆதாரத்தை உங்களால் தெரிவிக்க முடியாவிட்டால், வருமான வரித்துறை அதாவது விசாரணை நிறுவனம் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும். உங்களுக்கு தொல்லைகள் அதிகரிக்கலாம். பணமதிப்பு நீக்கத்திற்குப் பிறகு, உங்களிடம் வெளியிடப்படாத பணத்தைப் பெற்றால், உங்களிடமிருந்து மீட்கப்பட்ட பணத்தில் 137 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படலாம் என்று வருமான வரித்துறை கூறியுள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் படி, ஒருவர் ஒரே நேரத்தில் ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக எடுத்தால், அவர் தனது பான் கார்டை காட்ட வேண்டும். ஒரு வருடத்தில் ரூபாய் 20 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை டெபாசிட் செய்யலாம் அல்லது எடுக்கலாம். 2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணம் செலுத்தினால், பான் மற்றும் ஆதார் அட்டையைக் காட்ட வேண்டும். இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற இன்னும் ஒரு மாதமே உள்ள உடனே உங்கள் வங்கிக்கிளைக்குச்சென்று மாற்றுங்கள், புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளில் 93 சதவிகிதம் வங்கிகளுக்கு திரும்பிவிட்டன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மீதம் ஏழு சதவிகித நோட்டுக்கள் மட்டுமே பாக்கி எதற்கும் உங்கள் பாட்டி, மனைவி உங்கள் வீட்டில் பீரோவில் போட்டிருக்கும் பேப்பருக்கு அடியில் பரணில் தேடிப்பாருங்கள் கிடைத்தால் அதிஷ்டம் தானே !.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision