தங்க கடத்தல் ஸ்வப்னா வழக்கில் திருச்சியில் களமிறங்கிய என்.ஐ.ஏ!

தங்க கடத்தல் ஸ்வப்னா வழக்கில் திருச்சியில் களமிறங்கிய என்.ஐ.ஏ!

தங்கம் கடத்தலில் தொடர்புடைய திருச்சியை சேர்ந்த 6 பேரை பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ இதுவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். திருச்சி அண்டகுன்டான் ,ஜாபர் தெரு உள்ளிட்ட பகுதிகளிலிருந்த ஆறு பேரை என்.ஐ.ஏ இரவோடு இரவாக அள்ளிச் சென்றனர். கொல்கத்தா,மும்பை பெருநகரங்களில் உள்ளவர்களிடம் திருச்சியை சேர்ந்தவர்கள் கடத்தல் தங்க வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்க கடத்தலில் திருச்சி மலைவாசல் பகுதியில் நகைகடை வைத்திருப்பவருக்கும் தொடர்பு இருக்கிறது என்ற தகவல் வெளி வந்துள்ளது. மேலும் அண்டகுன்டான் பகுதியை சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட 6 பேரை தேசிய புலனாய்வு முகமை என ரகசிய இடத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்கத்தாவில் ஒருவரிடம் கோடிக்கணக்கில் கடத்தல் தங்கம் வாங்க பணம் கொடுத்திருப்பதும்,கடத்தல் தங்கத்திற்க்கு திருச்சி உள்ளவர்கள் ஏஜென்டாக இருந்துள்ளார்கள் என்பதும் விசாரணையில் தெரிய வருகிறது.

Advertisement

மேலும் ஒருவரிடம் பலர் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஏமாந்து இருப்பது விசாரணையில் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். தொடர்ந்து திருச்சியில் தங்க கடத்தல் ஸ்வப்னா உடன் தொடர்புடைய கடத்தலில் ஈடுபட்ட திருச்சி நபர்களை விசாரணை வளையத்தில் கண்காணிப்பிலும் வைத்துள்ளனர் என்.ஐ.ஏ. ஒட்டு மொத்தமாக டன் கணக்கில் தங்கம் கடத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . விரைவில் தங்க கடத்தல்கார்கள் எவ்வளவு கிலோ தங்கம் திருச்சியில் வாங்கியுள்ளார்கள் என்பதும் கடத்தலுக்கு உதவி உள்ளவர்களையும் என்.ஐ.ஏ கூண்டோடு கைது செய்ய போகிறார்கள் என்பது தெரிகிறது.

Advertisement
Advertisement