1000 டி.எம்.சி நீர் கடலுக்கு போனது - நோ தடுப்பணை விரைவில் புதிய நீரேற்று திட்டம் என அமைச்சர் திருச்சியில் பேச்சு

1000 டி.எம்.சி நீர் கடலுக்கு போனது - நோ தடுப்பணை விரைவில் புதிய நீரேற்று திட்டம்  என அமைச்சர்  திருச்சியில் பேச்சு
திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளிலும் கருவேலம் செடிகள் வளர்ந்து பயன்பாடற்று இருந்த 1000 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அதில் முதல் கட்டமாக 14 ஊராட்சிகளில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பண்ணையத்தில் ஆட்டு பண்ணை, மாடு பண்ணை, கோழிப்பண்ணை, மீன் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, காளான் வளர்ப்பு உள்ளிட்ட பண்ணைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு பண்ணை, ஒரு மாதம், ஒரு லட்சம் என்கிற அடிப்படையில் அது அமைக்கப்பட்டுள்ளது. 

 ஒருங்கிணைந்த பண்ணை தொடக்க விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதனை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார். ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்பட்டுள்ள பண்ணையத்தில் வேளாண் துறை, வன துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட துறைகள் மூலம் அங்கு பண்ணை அமைக்கப்பட்டு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பராமரிக்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த பண்ணையத்தை தொடங்கி வைத்த பின்பு பேசிய அமைச்சர் கே.என்.நேரு...

பெண்கள் தங்களை தாங்களே காத்து கொள்ளும் அளவிற்கு இத்திட்டம் இருக்கும். வருமானத்தை ஈட்டித்தரும்.
ஆயிரம் தடுப்பணைகளை கிராமத்தில் உருவாக்குவது நகராட்சியில் உள்ள குளங்களை சீரமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தில் உள்ள காவிரி, வைகை, தென்பெண்ணை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் 1000டி.எம்.சி  தண்ணீர் கடலுக்குள் சென்றுள்ளது.தடுப்பணைகளை கட்டுவதை விட நீரேற்று பாசன திட்டத்தை கொண்டு வர வேண்டுமென முதல்வரிடம் தெரிவித்த பொழுது கவனமாக கேட்ட இனி இந்த அரசு பாசனப்பகுதிகளை விரிவாக்கம் செய்தும் அதற்கான நீர் வசதி திட்டங்களை செயல்படுத்துவதில் முக்கியத்துவம் காட்டப்படும் என பேசினார்.
  

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மணிகண்டம் ஒன்றியத்தில் நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் அமைப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பண்ணையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து  பார்வையிட்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய..... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய...... https://t.co/nepIqeLanO