திருச்சி அரசு மருத்துவமனையில் 110 கோடியில் புதிய கட்டிடம்- பணிகள் தீவிரம்
திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தினமும் 4000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற வருகின்றனர். 800க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் நான்கு மாடி கட்டிடத்தில் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றது.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு மருத்துவக் கல்லூரியில் இடப்பற்றாக்குறையை சரி செய்யும் வகையில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியதை அடுத்து இதற்கான பணிகள் தற்போது 110 கோடியில் இரண்டு லட்சத்தி பத்தாயிரம் சதுர அடியில் ஏழு தளங்கள் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த புதிய கட்டிடத்தின் நான்கு லிப்ட்,3மாடிப்படிகள், ஒரு சறுக்கு பாதை ஒவ்வொரு தளத்திலும் கழிவறை நோயாளிகள் அமரும் வசதி செய்யப்பட்டுள்ளது. 700 படுக்கைகள் கொண்ட இந்த கட்டிடத்தில் 10 நவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட உள்ளன இரண்டு தளங்களில் பல்வேறு துறைகளுக்கான சிறப்பு அறுவை சிகிச்சை பிரிவு அமைக்கப்படுகிறது.
புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில் மிகவும் பயனுள் ளதாக அமையும்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய..... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision