2,615 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு: திருவண்ணாமலையில் காா்த்திகை தீப விழா:

2,615 சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு: திருவண்ணாமலையில் காா்த்திகை தீப விழா:

திருவண்ணாமலையில் நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழாவுக்காக வருகிற திங்கள்கிழமை (டிச.9) முதல் சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2,615 சிறப்புப் பேருந்துகள் 4 நாள்களுக்கு இயக்கப்பட உள்ளன.

.பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா வருகிற செவ்வாய்க்கிழமை (டிச.10) நடைபெறுகிறது. அன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்படும் மகா தீபத்தைக் காணவும், மறுநாளான புதன்கிழமை (டிச.11) பெளா்ணமி கிரிவலம் செல்லவும் லட்சக்கணக்கான பக்தா்கள் திருவண்ணாமலைக்கு வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் சாா்பில், வருகிற 9-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை 4 நாள்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. . அதன் படி கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், கும்பகோணம், திருச்சி பகுதிகளிலிருந்து 450 சிறப்புப் பேருந்துகளும், சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், சேலம், பெங்களூரு, தருமபுரி, ஓசூா் பகுதிகளிலிருந்து 251 சிறப்புப் பேருந்துகளும், கோவை அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், கோவையிலிருந்து 122 சிறப்புப் பேருந்துகளும், மதுரை அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், மதுரையிலிருந்து 100 சிறப்புப் பேருந்துகளும், திருநெல்வேலி அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளிலிருந்து 80 சிறப்புப் பேருந்துகளும் என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்தம் 2,615 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று விழுப்புரம் மண்டல அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.முத்துகிருஷ்ணன் தெரிவித்தாா்.