மத்திய மண்டலத்தில் சாராய ஒழிப்பு வேட்டை 962 பேர் கைது -ஐ.ஜி அதிரடி
கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி சாராயம் சிறப்பு ஒழிப்பு வேட்டை - மூன்று நாட்களில் 959 வழக்குகள் பதிவு - 962 குற்றவாளிகள் கைது இந்த ஆண்டில் 31 - குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் (Bootleggers) அடைப்பு.
இந்த வருடத்தில் (01.01.2023) முதல் (16.05.2023) வரை திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், மற்றும் கள்ளத்தனமாக சில்லறை மது விற்பனை செய்தவர்கள் மீது 13,331 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும். 13,508 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 1,43,793 லிட்டர் பாண்டிச்சேரி சாராயமும் (தஞ்சாவூர் - 989 லிட்டர், திருவாரூர் - 14.812 லிட்டர், நாகப்பட்டிணம் - 76,960 லிட்டர் மற்றும் மயிலாடுதுறை - 51,030 லிட்டர்) 1,220 லிட்டர் கள்ள சாராயமும். 11,254 லீட்டா சாராய ஊரல்களும் மற்றும் 1,980 லிட்டர் கள்ளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர, 28,617 விட்ட சில்லறை விற்பனை செய்த IMFL மதுபானங்கள் மற்றும் 441 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டில் கள்ளச்சாராயம் விற்ற 31 குற்றவாளிகள் குண்டா தடுப்புச் சட்டத்தில் னகது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களாக (14.05.23)-ம் தேதி முதல் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 9 மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம் மற்றும் பாண்டிச்சேரி மது வகைகளை ஒழிக்கும் சிறப்பு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநில எல்லையில் உள்ள மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டிணம் மற்றும் மயிலாடுதுறையில் நிரந்தரமாக உள்ள 8 மாநில எல்லை சோதனை சாவடிகளுடன் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டும், கண்காணிப்பு ரோந்து வாகனங்கள் நியமிக்கப்பட்டும் தீவிர கண்காணிப்பு வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று நாட்களில் 14:05:2023 முதல் மத்திய மண்டலத்தில் மொத்தம் 959 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் (திருச்சி - 102, புதுக்கோட்டை - 90, கரூர் -159. பெரம்பலூர் 73. அரியலூர் - 70, தஞ்சாவூர் - 149, திருவாரூர் - 143. நாகப்பட்டிணம் - 96 மற்றும் மயிலாடுதுறை (77) 962 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு - உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவற்றில் 19,162 லிட்டர் பாண்டிச்சேரி சாராயமும், 102 லிட்டர் கல்ள சாராயமும், 1389 லிட்டர் சாராய ஊரல்களும் மற்றும் 450 லீட்டர் கள்ளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவை தவிர, 1268 லிட்டர் சில்லறை விற்பனை செய்த IMFL மது வகைகளும் மற்றும் 15 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கள்ளசாராயம் மற்றும் பாண்டிச்சேரி சாராயங்கள் புழக்கத்தில் உடள்ளதை முற்றிலுமாக ஒழிக்கும் பொருட்டு அனைத்து மாவட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர் நேடுதல் வேட்டை தொடரும் என்றும், கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய மண்டல காவல்துறை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn