சாலை மறியலில் ஈடுபட்ட 37 பேர் மீது வழக்கு பதிவு
மணிப்பூர் மாநில கலவரத்தில் இளம் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் நேற்று (24.07.2023) காட்டூர் பகுதியில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 37 பேர் மீது திருவெறும்பூர் போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் ஒரு சமூகத்தினர் மற்றொரு சமூகத்தினரை சேர்ந்த பெண்களை நிர்வணப்படுத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இந்திய மாணவர் சங்கம் சார்பில் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் உருமு தனலட்சுமி கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சூர்யா தலைமையில், இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 37 பேர் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது திருவெறும்பூர் போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் செயல்பட்டது மற்றும் போக்குவரத்திற்கு இடையூராக செயல்பட்டது ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn