போதை பழக்கத்தை கைவிட்ட மாணவர்களின் பெற்றோர்களை குடியரசு தின விழாவில் பெருமைப்படுத்திய அரசு பள்ளி

போதை பழக்கத்தை கைவிட்ட மாணவர்களின் பெற்றோர்களை குடியரசு தின விழாவில் பெருமைப்படுத்திய அரசு பள்ளி

 திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதை பழக்கத்தை கைவிட்ட மாணவர்களின் பெற்றோர்களை  குடியரசுதின விழாவில் பள்ளி நிர்வாகம் பெருமைப்படுத்தியுள்ளது. 

மணப்பாறை அடுத்த சமுத்திரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 278 மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். மாணவ மாணவியர்களிடையே பொது சிந்தனை, நல்லறிவு, ஒழுக்கம் ஆகியவை ஏற்படுத்தும் வகையில் பள்ளியின் தலைமையாசிரியர் டி.ராஜசேகரன், அவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகளை ஏற்படுத்தி தந்து வருகிறார்.

அவ்வகையில் வேண்டாம் போதை பிரச்சாரத்தினை தனது பள்ளியில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி நடத்தி மாணவ மாணவியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அடுத்த நடவடிகையாக மாணவ மாணவியர்களிடம் கடிதம் எழுதும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு கடிதம் எழுதும் நிகழ்வு கடந்த நவம்பர் 9-ஆம் தேதி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 

கடிதங்களில் மாணவ மாணவியர்கள் தங்களது பெற்றோர்களுக்கு போதை பழக்கத்தை கைவிடவும், பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்றுவோம் எனவும் கடிதங்களை எழுதினர். இக்கடிதத்தால் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் தாங்கள் அடிமையாக போதை பழக்கத்தை தொடர்ந்து கைவிட்டு வருகின்றனர். அதன்படி வியாழக்கிழமை குடியரசு தினவிழா நிகழ்ச்சியின்போது போதை பழக்கத்தை கைவிட்ட மாணவர்களின் பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் பள்ளிக்கு அழைத்து வந்து அவர்களை பெருமைப்படுத்தியுள்ளது.

படவிளக்கம்: சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி குடியரசு தினவிழாவில் பெருமைப்படுத்தப்பட்ட போதை பழக்கத்தை கைவிட்ட மாணவர்களின் பெற்றோர்கள்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்ஆப் மூலம் அறிய

  https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

 

#டெலிகிராம் மூலமும் அறிய....  https://t.me/trichyvisionn