தக்காளியில் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் ஒரு நாள் பயிற்சி
இலவச பயிற்சி அறிவிப்பு - தக்காளியில் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் கரூர் மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தின் மூலம் வரும் (20.5.2023 )சனிக்கிழமை காலை 10:30 மணி அளவில் தோகைமலை வட்டாரம் புழுதேரியில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் மையத்தில் தக்காளியில் மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரித்தல் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் தக்காளியில் உள்ள சத்துக்கள் அதன் நன்மைகள் மற்றும் தக்காளி சாஸ், தக்காளி ஜாம் மற்றும் தக்காளி உலர் பவுடர் தயாரித்து அதை எவ்வாறு பயன்படுத்துவது குறித்த செயல்முறை விளக்க பயிற்சியும் நடைபெற உள்ளது. மேலும் உணவு தரச் சான்று எவ்வாறு பெறுவது குறித்து விளக்கம் அளிக்கப்படும்.
எனவே விவசாயிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பயனடையுமாறு வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார். மேலும் முன் பதிவு செய்ய 9750577700 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். முன் பதிவு மிக மிக அவசியம்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn