வறுமையில் வாடும் திருச்சி நாடக கலைஞர்

வறுமையில் வாடும் திருச்சி நாடக கலைஞர்

உலகம் முழுவதும் உள்ள நடுத்தர குடும்பத்தாரின் இலவச பொழுது போக்கு அம்சமாக கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் நாடகம் என்ற அற்புதமான கலை உலகெங்கும் கொடிகட்டி இருந்தது. உலகில் நாடகம் நடைபெறாத கிராமங்களே இல்லை. மொழி, கலாசாரம் கடந்து அனைவராலும் நாடகங்கள் ரசிக்கப்பட்டன. நகைச்சுவை அம்சங்களும், கோமாளித்தனமும் நாடகம் மூலமே மக்களிடம் எளிதாக சென்றடைந்தது. பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு வாழ்க்கையாகவே இருந்துள்ளது.

நாடகத்தின் வருமானத்தை நம்பியே லட்சக்கணக்கான மக்கள் வாழ்க்கை நடத்தியுள்ளார்கள். நாடக மேடையே லட்சியமாக கொண்டவர்களும், தங்களது வருமானம் முழுவதையும் நாடகத்திற்கு அர்ப்பணித்தவர்களும், தங்களது சொத்தை விற்று நாடக கம்பெனிகளை தொடர்ந்து நடத்தியவர்களும் உண்டு.

வயல் விளைந்து... ஊர் செழித்ததைக் கொண்டாட திருவிழா. திருவிழாவில் மக்களை சந்தோசப்படுத்த கலைஞர்கள். சிந்திக்க வைத்த, சிரிக்க வைத்த, சிந்தனையை தூண்டிய கலைஞர்கள் வாழ்க்கையை சினிமா, டிவி என்று சூறையாடியது.

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் சுகந்தி, 60 வயது கடந்த, நாடக கலைஞர் ஆவார். தன்னுடைய ஏழு வயது முதல் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கியவர் விழிப்புணர்வு, கலை நிகழ்ச்சி, திருவிழாக்கள் போன்ற பல்வேறு மேடைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியவர். ஒயிலாட்டம், கரகாட்டம் என தன்னுடைய பன்முகத்திறமையால் எவ்வளவு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.

தன்னுடைய திறமையால் மக்களை ரசிக்க வைத்தவர். இத்தனை ஆண்டுகால நாடகத்துறையில் தன்னுடைய குடும்ப வறுமையை போக்க முடியவில்லை என்பதே வருத்தத்திற்குரிய செய்தி. அதுவும் கொரரோனா காலகட்டத்திற்குப் பிறகு மிகவும் வறுமையால் வாடி உள்ளார். அவரது திறமைக்கும் அவர் வறுமையை போக்க ஒரு வழியை உருவாக்கி தந்திருக்கிறது இந்த இல்லம் தேடி கல்வி முறை 

அருமையான பாடல்களை இனிமையாக பாடுகின்றார். அவரை பாடத்தில் உள்ள பாடல்களை வாய்ப்பாடுகளை, கதைகளை குழந்தைகளுக்கு அருமையாக பாடுகின்றார். இவரின் இசையை ஸ்ரீரங்கத்தில் உள்ள பள்ளிகளுக்கு பயன்படுத்தி மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான செயல் திட்டங்களை கல்வியாளர் இராஜேந்திரன் செய்து வருகின்றார். 

இதுகுறித்து சுகந்தி அவர்களிடம் பேசியபோது, சிறுவயதிலிருந்து என்னுடைய ஆர்வத்தின் பேரில் நாடகக் கலையை என் உயிராக நினைத்து செய்துவந்தேன். கலையின் மீதுகொண்ட ஆர்வம் வறுமையை போக்கி கொள்ள உதவியது ஆனால் தற்போது நாடகங்கள் இல்லாமல் போனதால் வறுமைசூழ்ந்து கொண்டது.

இன்றைய சூழலில் இந்த வாய்ப்பை என் வாழ்வை மாற்றும் வழியாகத்தான் பார்க்கிறேன். குழந்தைகளுக்கு என்னால் முடிந்த வகையில் என் திறமையை பயன்படுத்தி அவர்களுக்கு புரியும் வகையில் எல்லாவற்றையும் கற்றுக் கொடுக்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO